புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிங்கப்பெண்ணில் உண்மையை மறைக்கும் அன்பு, பொங்கி எழுந்த ஆனந்தி.. முழு வில்லனாய் மாறிய மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று ஆனந்தி எப்படி தெரிந்து கொள்வாள் என்ற எதிர்பார்ப்பு நேயர்களுக்கு ரொம்ப அதிகமாகவே இருந்தது.

அழகன் ஆனந்திக்கு பரிசளித்த செயின் மூலம் தான் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. அது எப்படி இரண்டு பேரும் சேர்ந்து இருக்கும் செயினை அன்பு அந்த பைக்குள் வைத்திருப்பான் என்ற சந்தேகம் நேற்று வரை எல்லோருக்கும் இருந்திருக்கும்.

அந்த செயினில் இருந்து தன்னுடைய போட்டோவை அன்பு தனியாக பிரித்து எடுத்து வைத்து விடுவான். அதை அவனுடைய தங்கை யாழினி பார்த்துவிட்டு தான் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஆனந்தியின் பைக்குள் வைக்கிறாள். இதை ஆனந்தி நேற்று யாழினிக்கு ஃபோன் பண்ணும் போது சொல்கிறாள்.

பொங்கி எழுந்த ஆனந்தி

மேலும் நீங்களும் என் அண்ணனும் சேர வேண்டும், அவன் வெளிநாடு போகாமல் உங்களால் மட்டும் தான் தடுக்க முடியும் என்று யாழினி சொல்கிறாள். ஆனந்தி வேகமாக ஆட்டோ பிடித்து அன்புவைத் தேடி போகிறாள்.

அப்போது ஆட்டோவில் ஏதோ பிரச்சனை ஏற்பட பொறுமை தாங்க முடியாமல் ஆனந்தி வேறொரு ஆட்டோ பிடிக்க ஓடி வருவது போல் காட்டப்படுகிறது. முழுக்க முழுக்க அன்புமையும் மனதில் நினைத்துக் கொண்டே ஆனந்தி ஓடி வருகிறாள்.

அப்போது கடவுள் போல அன்புவை கோயம்பேடு மார்க்கெட்டில் இறக்கி விட்ட அந்த ஆட்டோக்காரர் வருகிறார். அப்போது அவரிடம் அண்ணா அன்பு தான் அழகன் என்று சொல்லி அழுகிறாள். அவர் நீ ரொம்ப லேட் பண்ணிட்டம்மா, அவன இப்போதான் கோயம்பேட்டில் இறக்கிவிட்டு வருகிறேன் என்று சொல்கிறார்.

மேலும் அன்பு ஐதராபாத் போயிருந்தாலும் அவனுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் நீ வா என ஆட்டோவில் ஏற்றுக் கொள்கிறார். ஆனந்தி அன்புவைத் தேடி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் போவது போல் நேற்றைய எபிசோடு முடிந்திருக்கிறது.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷின் அம்மா மித்ராவுக்கு போன் செய்து நான் சொன்னது போல் மகேஷிடம் ஒரு விஷயத்தை சொல்லி என பிளான் போட்டு கொடுக்கிறார். அடுத்த காட்சியிலேயே மித்ரா, மகேஷிடம் ஏதோ சொல்ல, நான் ஒருவரை அதிகம் நம்பி ரொம்ப இடம் கொடுத்து விட்டேன் என்று கோபமாக சொல்கிறான்.

அதே நேரத்தில் அடுத்த காட்சியில் ஆனந்தி அன்புவை பார்த்து விடுகிறாள். அன்புவிடம் அழகன் இருக்கிறானா இல்லையா என்று கேட்கிறாள். அதற்கு அன்பு இல்லை என்று பதில் சொல்கிறான். கோபத்தில் ஆனந்தி அன்புவை அடிப்பது போல் அந்த ப்ரோமோ முடிந்து இருக்கிறது.

என்னதான் ஆனந்தியை அன்பு தான் அழகன் என்று கண்டுபிடித்தாலும், அன்பு திட்டவட்டமாக ஆனந்தி மகேஷுடன் சேர வேண்டும் என்று விரும்புகிறான். இதனால் ஆனந்தியின் காதலை ஏற்றுக் கொள்வானா என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.

அதே நேரத்தில் அன்புவே மனம் மாறி ஆனந்தியின் காதலை ஏற்றுக் கொண்டாலும், மகேஷ் முழு வில்லனாக மாறி எப்படி பழி வாங்குவான் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் கம்பெனியிலிருந்து வெளியே வரும்போது ஆனந்தி கருணாகரனை தள்ளிவிட்டு ஒரு பெரிய கம்பியை எடுத்து அடித்து விடுவேன் என்று மிரட்டி விட்டு வந்திருக்கிறாள். இதை வைத்து கருணாகரன் ஆனந்தியை என்ன பண்ணப் போகிறான் என்பது அடுத்த எபிசோடில் தான் தெரியும்.

- Advertisement -

Trending News