வரும் டிசம்பர் 8-ஆம் தேதி சிபி ராஜின் ‘சத்யா’ வெளியாகிறது. சத்யராஜ் அவர்களின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில், சிபிராஜுடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ஆனந்தராஜ் இவ்விழாவில் பேசியதன் தொகுப்பு ..

“சத்யராஜ் சார் ஹீரோவா ஆகாம இருந்திருந்தால் நானெல்லாம் வில்லனா ஜெயிச்சிருக்கவே முடியாது. அப்படிப்பட்ட சத்யராஜ் சார் தயாரிப்புல இன்னைக்கு நடிச்சிருக்கிறதுல பெரிய சந்தோஷம். இன்னைக்கு புதுசா நடிக்க வர்றவங்க, நடித்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும். இது அட்வைஸா நினைக்க வேண்டாம். நடிப்பைக் கற்றுக்கொள்வதற்கு முன்னாடி முதலில் நல்ல பண்பை, ஒழுக்கத்தைக் கற்க வேண்டும். மூத்த நடிகர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைத் தந்தாலே அதுவே அவர்களை பல உயரங்களுக்கு கொண்டு செல்லும்.

நான் இப்போ சமீபத்துல ஒரு விழாவிலே கலந்துகிட்டபோது எனது அருமை நண்பர் அஜித் அவர்களைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். எங்களைவிட மூத்த நடிகர் ஒருவரிடம் அவர் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து, உண்மையிலேயே அந்த இடத்திற்குத் தகுதியானவர் தான் என தோன்றியது.” என்றார்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான சத்யா தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘க்‌ஷணம்’ படத்தின் ரீ-மேக் ஆகும்.