Connect with us
Cinemapettai

Cinemapettai

rajinikanth anandraj atlee

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியை பொரட்டி எடுத்த ஆனந்தராஜ்.. அவ்வளவு பெரிய ஆள இப்படி டம்மியா யூஸ் பண்ணிட்டாரு அட்லி

தமிழ்சினிமாவின் 90 காலகட்டத்தில் அனைத்து ரசிகர்களும் நடுங்கக் கூடிய அளவிற்கு வில்லனாக பிரபலம் அடைந்தவர் ஆனந்தராஜ். இவர் நடிப்பில் வெளியான சூரியவம்சம், பேரரசு மற்றும் பாட்ஷா போன்ற படங்களில் இவரது வில்லத்தனமான நடிப்பு கோடிக்கான ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இவர் சினிமாவில் மறக்க முடியாத சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதில் பாட்ஷா படத்தில் நடித்த இந்திரன் கேரக்டர் பற்றி சில தகவல்களை கூறியுள்ளார்.

ஆனந்தராஜ் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் வில்லனாக மிரட்டியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் 35 வருட சினிமா வாழ்க்கையில் ஒரு கலக்கு கலக்கியவர்.

rajinikanth anandraj

rajinikanth anandraj

ஆனந்தராஜ் வில்லன் கதாபாத்திரம் மட்டுமின்றி அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடியவர். அதனால் அந்த காலகட்டத்தில் அனைத்து இயக்குனர்களும் ஆனந்தராஜ்க்கு படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து விடுவார்கள்.

அந்த மாதிரி பாட்ஷா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது நடிக்கிறீர்களா என கேட்டதற்கு முதலில் ஒப்புக் கொண்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினி அடிக்கிற மாதிரி ஒரு காட்சியை வைத்துள்ளனர்.

இதனை கேட்டதுடன் சற்று பயந்து உள்ளார். அதன் பிறகு ரஜினியை நீங்கள் தைரியமாக பண்ணுங்க என்று அட்வைஸ் பண்ணியுள்ளார்.

அதன்பிறகுதான் அந்த காட்சியில் ரஜினி அடிப்பதுபோல் நடித்துள்ளார். ரஜினி ரொம்ப நெருங்கிய நண்பராக பழகியதாகவும் அந்த படத்தில் நடித்த இந்திரன் கதாபாத்திரம் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியவில்லை என்றும் பெருமையாக கூறியுள்ளார்.

ஆனால் சமீபத்தில் அட்லி பிகில் படத்தில் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் அதனால் தற்போது வரும் பட வாய்ப்புகள் எல்லாமே காமெடி கதாபாத்திரமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

Continue Reading
To Top