திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

சிங்கப்பெண்ணில் தைரியமாக முடிவெடுத்த ஆனந்தி.. கை கொடுக்க போவது அன்புவா இல்லை மகேஷா?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாக சீரியலில் அவ்வளவாக ஹீரோ அன்பு வை காட்டாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.

எப்போதுமே ஆனந்திக்கு நடக்கும் பிரச்சனையை அன்பு மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தீர்த்து வைப்பது போலத்தான் காட்சிகள் நகரும். ஆனால் இந்த முறை ஆனந்தியின் தோழி காயத்ரிக்கு பிரச்சனை வருவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

காயத்ரியை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டிருந்தவன் தற்போது காயத்ரியை கடத்தி வைத்திருக்கிறான். காயத்ரி ஆனந்தி நினைத்தால் மட்டும் தான் நம்மை காப்பாற்ற முடியும் என்று எப்படியோ அவள் இருக்கும் லொகேஷனை ஆனந்திக்கு வாட்ஸப்பில் அனுப்பி வைக்கிறாள்.

ஆனந்திக்கு முதலில் எதற்காக காயத்ரி இதை அனுப்பி இருக்கிறார் என்று புரியவில்லை. ஜெயந்தி மற்றும் சௌசௌ உடன் ஹோட்டலுக்கு சாப்பிட செல்கிறாள். அது காயத்ரியை கடத்தி வைத்திருப்பவன் இன்னொரு பெண்ணை மிரட்டி கொண்டிருக்கிறான்.

கை கொடுக்க போவது அன்புவா இல்லை மகேஷா?

இந்த சம்பவத்தை ரொம்ப நேரமாக பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தி அவன் வெளியில் சென்றிருக்கும் நேரத்தில் அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என விசாரிக்கிறாள். அந்தப் பெண் முழுசாக தன்னுடைய பிரச்சனையை சொல்லி முடிப்பதற்குள் அவன் அந்த இடத்திற்கு வந்து விடுகிறான்.

அது மட்டும் இல்லாமல் இது எங்களுக்கு நடுவுல இருக்குற பிரச்சனை நீ யாரு அதைக் கேட்பதற்கு என ஆனந்தியை முறைத்து விட்டு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் விடுகிறான். ஆனந்திக்கு இது ஏதோ தப்பாக தெரிவதால் அவனுடைய வண்டியை ஃபாலோ பண்ணிக் கொண்டு செல்கிறாள்.

அதே நேரத்தில் பெண்களை கடத்தி வைத்திருக்கும் இடத்திற்கு வந்த அவன் உடனடியாக அவர்களை எல்லாம் காரில் ஏற்றுக் கொண்டு வேறு இடத்திற்கு செல்ல திட்டம் போடுகிறான். அவன் இருக்கும் வண்டிக்குப் பின்னால் ஆனந்தி போன ஆட்டோவும் நிற்கிறது.

கண்டிப்பாக அந்த கூட்டத்தோடு காயத்ரியும் வெளியில் வர வாய்ப்பு இருக்கிறது. காயத்ரியை பார்த்த ஆனது எப்படியும் அவளை காப்பாற்ற முயற்சி எடுப்பாள். என்னதான் ஆனந்தி சிங்கப்பெண் என்றாலும் அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால் காப்பாற்ற அன்பு மற்றும் மகேஷ் தான் வர வேண்டும். இந்த முறை ஆனந்தியின் தோழி காயத்ரியை காப்பாற்ற அன்பு வருகிறானா அல்லது மகேஷ் வருகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News