சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

யார் நினைச்சாலும் அழகனை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது.. சிங்கப்பெண்ணில் மகேஷிடம் சவால் விட்ட ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு ஆனந்தியை மகேஷிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாட்டுக்கு போக தயாராகி விட்டான். மகேஷ் அன்பு வெளிநாட்டிற்கு போய்விட்டால் நம்ம ரூட் கிளியர் என நினைத்துக் கொண்டிருக்கிறான்.

மகேஷ் உடன் வாழ்ந்தால் தான் ஆனந்தியால் சந்தோஷமாக இருக்க முடியும், ஆனந்தி குடும்பத்தின் பொருளாதார கஷ்டமும் நீங்கும் என நினைத்துக் கொண்டு அன்பு தன்னுடைய காதலையே மகேஷுக்கு தாரை வார்த்து கொடுக்க தயாராகி விட்டான்.

மகேஷிடம் சவால் விட்ட ஆனந்தி

ஆனால் இவர்கள் இரண்டு பேருமே ஆனந்தியின் மனதில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அதிலும் அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு மகேஷ் ரொம்பவும் மிருகத்தனமாக நடந்து கொண்டிருக்கிறான்.

ஆனந்தியை வீட்டில் இருந்து அழைத்துக் கொண்டு மகேஷ் கார் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு பைக்கில் வருகிறான் அன்பு. மகேஷ் அன்புவின் முகத்தை பார்த்து பேச கூட தயாராக இல்லை. ஆனந்தியை இறக்கிவிட்டு அன்பு கிளம்பும் நேரத்தில் அவள் கையில் இருக்கும் பையை பற்றி கேட்கிறான் மகேஷ்.

அழகன் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கிறது சார் என்று சொன்னது மகேஷுக்கு ரொம்பவும் கோபம் வந்து விடுகிறது. உடனே அவள் கையில் இருக்கும் பையை வாங்கி வீசி விடுகிறான். ஆனந்தி அழுது கொண்டே அதை எல்லாத்தையும் எடுத்து மீண்டும் தன்னுடைய கட்டப்பையில் வைத்துக் கொள்கிறாள்.

இதை அன்பும் பைக்கை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறான். அப்போது ஆனந்தி இருவருக்குமே புரியும்படி மகேஷிடம் யாரு நினைச்சாலும் அழகனை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று சொல்கிறாள். இது மகேஷ் மனதில் பெரிய கோபத்தை ஏற்படுத்துகிறது.

அன்பு அப்படியே மிரண்டு போய் ஆனந்தியை பார்க்கிறான். அதே நேரத்தில் காயத்ரி தன்னுடைய தோழிகளிடம் ஆனந்தி எதனால் அன்று இரவு ஹாஸ்டலுக்கு லேட் ஆக வந்தால் என்பதை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறாள். இதை வார்டன் கேட்டு விடுகிறார்.

இனி அடுத்து வார்டன் ஆனந்தியை மீண்டும் ஹாஸ்டலுக்கு அழைத்து வந்து விடுவார். அன்பு ஆனந்தியை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு போக எந்த விதத்திலும் வாய்ப்பு இல்லை. எந்த காரணத்தால் அன்பு வெளிநாடு போக வேண்டாம் என முடிவெடுக்கிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News