புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிங்கப்பெண்ணில் அன்பு மீதான காதலை உணர்ந்த ஆனந்தி.. சுயநல மிருகமாய் மகேஷ்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு மகேஷ் தன்னுடைய காதலை விட்டுக் கொடுத்து விடுவான் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மகேஷ் மொத்தமாக சுயநலம் மிருகமாய் மாறி இருக்கிறான். அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு மகேஷின் நடவடிக்கை மொத்தமாக மாறிவிட்டது. ஆனந்தி எந்த காரணத்தை கொண்டும் இனி அன்பு வீட்டில் இருக்கக் கூடாது என முடிவெடுக்கிறான்.

சுயநல மிருகமாய் மகேஷ்

மகேஷ் அழகன் யார் என கண்டுபிடித்த பிறகு அதை ஆனந்தியிடம் சொல்வான் என எதிர்பார்த்த முத்துவுக்கும் பெரிய ஏமாற்றம் தான். கம்பெனிக்கு வந்த ஆனந்த இடம் இன்று சாயந்திரமே நீ வேற ஹாஸ்டலுக்கு போகப் போகிறாய் என்று சொல்கிறான்.

அதற்கு ஆனந்தி அன்பு வெளிநாடு போக இருக்கும் சூழ்நிலையில் நான் நாளை வேற ஹாஸ்டலுக்கு போகிறேன். நீங்கள் அன்பு விடம் வெளிநாட்டுக்கு போக வேணாம் என்று சொல்லுங்கள் மகேஷ் சார் என்று கேட்கிறாள்.

இங்கேயே இருந்தால் நான் பிரச்சனை பண்ணுவேன் என்று தான் அவன் வெளிநாடு போகிறான். வெளிநாட்டுக்கு போன கொஞ்ச நாள் கழித்து ஆனந்தியை வெளிநாட்டிற்கு கூட்டிக்கொண்டு போய்விடுவான் என தவறாக மகேஷ் மனதிற்குள் நினைக்கிறான்.

ஆனந்தியிடம் மத்தவங்களோட சொந்த முடிவுல நான் தலையிட முடியாது அன்பு வெளிநாடு போனால் போகட்டும் என்று மகேஷ் சொல்கிறான். இது ஆனந்திக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. சரி நான் அன்பு வீட்டுக்கு போய் என்னோட துணிமணிகளை எடுத்துட்டு வரேன்னு ஆனந்தி சொன்னதுக்கு, நீ இனி அன்பு வீட்டு பக்கமே போகக்கூடாது என்கிறான் மகேஷ்.

இது பற்றி அன்பு விடம் ஆனந்தி சொல்லும் போது அன்புக்கும் அது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அன்பு விடம் வெளிநாட்டுக்கு போக வேண்டாம் என கதறி அழுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் யாழினி ஆனந்தியிடம் நீங்க எங்க அண்ணனை காதலிக்கிறீங்களா , உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது எனக்கு அப்படித்தான் தோணுது என சொல்கிறாள். ஆனந்திக்கு இந்த விஷயம் அவளை யோசிக்க வைக்கிறது. ஆனந்தியை பிரிய மனமில்லாமல் அன்பு கதறி அழுவது போல் காட்டப்பட்டிருக்கிறது

- Advertisement -

Trending News