செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சிங்கப்பெண்ணில் அன்புவை பார்க்க ஓடி வரும் ஆனந்தி.. ஆட்டோக்காரர் கொடுத்த டிவிஸ்ட், இந்த தடவையும் மிஸ் ஆயிடுச்சே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று ஆனந்திக்கு தெரிய வேண்டும் என்பது இந்த சீரியல் நேயர்களின் பல மாத கனவாக இருந்தது.

அழகனை மனதிற்குள் உருகி உருகி காதலித்து விட்டு நேரில் அன்புவை பார்க்கும் போதெல்லாம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி. அதன் பின்னர் அன்பு தனக்கு ஒரு நல்ல நண்பனாக கிடைத்து விட்டான் என அவனோடு ரொம்ப உரிமையாக பழக ஆரம்பித்தாள்.

ஆட்டோக்காரர் கொடுத்த டிவிஸ்ட்

அதிலும் ஹாஸ்டலில் இருந்து வெளியில் வந்த ஆனந்திக்கு அன்பு அடைக்கலம் கொடுத்த பிறகு இவர்களுடைய நெருக்கம் கொஞ்சம் அதிகமாகத்தான் செய்தது. அதே நேரத்தில் ஆனந்தியின் குடும்ப கஷ்டத்தை பார்த்துவிட்டு மகேஷ் போன்ற ஒரு பெரிய பணக்காரனுடன் அவள் வாழ்ந்தால் தான் அவளுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என அன்பு தன்னுடைய காதலை மறைத்து விட்டான்.

அன்பு தான் அழகன் என்று தெரிந்து கொண்ட மகேஷ் முற்றிலுமாக வில்லனாக மாறிவிட்டான். இந்த நிலையில் எப்படித்தான் ஆனந்திக்கு அன்பு தான் அழகன் என்று தெரியப் போகிறது என ரசிகர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

கடைசியாக அழகன் கொடுத்த செயினில் அன்புவின் புகைப்படத்தை ஆனந்தி பார்த்து அன்பு தான் அழகன் என தெரிந்து கொண்டாள். அன்பு வை பார்க்க உடனடியாக கம்பெனியை விட்டு வெளியே வருகிறாள் ஆனந்தி.

அந்த நேரத்தில் அழகன் யார் என்று தெரிந்த ஆட்டோக்காரர் ஆனந்தியின் எதிரில் வருகிறார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆட்டோக்காரரிடம் அண்ணன் அன்பு தான் அழகன் என்று சொல்கிறாள். அதற்கு ஆட்டோக்காரர் ரொம்ப லேட்டா தெரிஞ்சுக்கிட்டேமா அவ இந்த ஊரை விட்டு போக கிளம்பி விட்டான் என்று சொல்கிறார்.

இது ஆனந்திக்கு பேரதிர்ச்சியாக அமைந்து விடுகிறது. ஆனந்தி தொடர்ந்து போன் கால் செய்து கொண்டிருக்கிறாள், அதே நேரத்தில் ஆட்டோக்காரர் அன்பு விடம் எப்படியாவது ஆனந்தியின் காதல் உன்னை அவளிடம் சேர்த்து விடும் என்று சொல்கிறார். இதை யோசித்து அன்பு வெளிநாட்டிற்கு போகாமல் வீடு திரும்பி விடுவானா, அல்லது அன்பு தான் அழகன் என்று தெரிந்திருக்கும் சூழ்நிலையில் அன்பு ஹைதராபாத் சென்றது போல் காட்டுவார்களா என இனிவரும் எபிசோடுகளில் தான் தெரியும்.

- Advertisement -

Trending News