வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சிங்கப்பெண்ணில் அழகன் யாரென தெரிந்து கொள்ள ஆனந்திக்கு கிடைத்த துருப்பு சீட்டு.. உண்மையை சொல்வானா அன்பு?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு வீட்டில் யாழினியின் தோழி பானு வேடத்தில் ஆனந்தி ரொம்பவும் சந்தோஷமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறாள்.

நேற்றைய எபிசோடில் எல்லோரும் அமர்ந்து மதிய உணவு சாப்பிடும் போது அன்புவின் அம்மா இதில் எந்தெந்த உணவு நான் சமைத்தது, எந்தெந்த உணவு பானு சமைத்தது என கண்டுபிடித்து சொல் என அன்புவிடம் கேட்கிறார்.

அன்பு என்ன செய்வது என தெரியாமல் என முழிக்கிறான். அந்த நேரம் ஆனந்தி கிட்டே வந்து சுய்யம் மற்றும் பால் கொழுக்கட்டை தான் நான் சமைத்தது என க்ளூ கொடுத்து விடுகிறாள். உடனே அன்பும் அவனுடைய அம்மாவிடம் சமைத்த சாப்பாடுகள் அத்தனையுமே அருமையாக இருக்கிறது.

உண்மையை சொல்வானா அன்பு?

பால் கொழுக்கட்டை மற்றும் சுய்யம் தான் கொஞ்சம் டேஸ்ட் குறைவாக இருக்கிறது அதனால் அதை பானு சமைத்து இருப்பாள் என சொல்கிறான். உடனே அன்புவின் அம்மா இல்லை இல்லை இந்த பெண்ணின் கைப்பக்குவம் ரொம்பவே நன்றாக இருக்கிறது.

அதுவும் அப்பாவின் திதியின் போது சமைத்த ஆனந்தியின் கைப்பக்குவம் அப்படியே இருக்கிறது என சொல்கிறார். உடனே ஆனந்தி மற்றும் அன்புக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. யாழினி மற்றும் அன்புவின் அம்மா இருவரும் வீட்டின் வெளியே பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது ஆனந்தி அன்பு கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு மொட்டை மாடியில் இருக்கிறாள்.

அன்புவின் அம்மாவை பட்டாசு வெடிக்க வைக்க யாழினி திசை திருப்பி விட்டு விட்டாள். அன்புவும் ஜாலியாக மொட்டை மாடியில் ஆனந்தியுடன் பட்டாசு வெடிக்கிறான். அப்போது பட்டாசு சத்தம் கேட்டதும் பயத்தில் ஆனந்தி அன்புவை கட்டிப்பிடிக்கிறாள்.

அதே நேரத்தில் மகேஷ் மொட்டை மாடியில் வந்து விடுகிறான். இது அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்குமே ஒருவித அச்சத்தை கொடுக்கிறது. அன்பு உடனே மகேஷிடம் நடந்ததை சொல்லி மன்னிப்பு கேட்கிறான். உடனே மகேஷ் நான் எதுவுமே தப்பாக நினைக்கவில்லை, ஆனந்தி பட்டாசு வெடிப்பதால் பயந்து தான் உன்னை கட்டி பிடித்தாள் என எனக்கு தெரிகிறது என சொல்கிறான்.

பின்னர் அனைவரும் கீழே இறங்கி வீட்டிற்குள் போகிறார்கள். அப்போது அன்புவின் அம்மா பால் கொழுக்கட்டை மற்றும் பலகாரங்களை மகேஷுக்கு கொடுக்கிறார். மகேசும் அதை ரொம்பவும் விரும்பி சாப்பிடுகிறான்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சில எபிசோடுகளுக்கு முன் அன்புவை சந்தித்த அந்த ஆட்டோக்காரரை ஆனந்தி சந்திக்கிறாள். அப்போது ஆனந்தியிடம் தான் அழகனை பார்த்ததாக ஆட்டோக்காரர் சொல்கிறார். உடனே ஆனந்தி அன்புவுக்கு போன் பண்ணி நடந்ததை சொல்கிறாள். இவ்வளவு நடந்த பிறகு ஆவது அன்பு மனம் மாறி நான் தான் அழகன் என்ற உண்மையை சொல்கிறானா என பார்க்கலாம்.

- Advertisement -

Trending News