புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிங்கப்பெண்ணில் அதீத காதலால் எல்லை மீறும் அன்பு, ஆனந்தி.. நொறுங்கி போன மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலின் அடுத்த வார புரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்திக்கு நல்ல வாழ்க்கையை மகேஷ் நினைத்தால் மட்டும் தான் கொடுக்க முடியும் என அன்பு நினைக்கிறான்.

இதனால் ஆனந்தியை விட்டு விலகுவது என முடிவெடுத்து விடுகிறான். பங்களாதேஷ் நாட்டில் தங்கி வேலை பார்க்கும் வாய்ப்பும் அன்புக்கு கிடைக்கிறது. அந்த நேரத்தில் தான் காயத்ரி பிரச்சனையில் தலையிட்டு ஆனந்தி ஹாஸ்டலை விட்டே வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.

அதீத காதலால் எல்லை மீறும் அன்பு, ஆனந்தி

மகேஷுக்கு அவனுடைய அம்மாவை மீறி ஆனந்தியை அவனால் அவனுடைய வீட்டில் தங்க வைக்க முடியவில்லை. மகேஷ் ஆனந்தியை அன்பு வீட்டில் தங்க வைத்த நேரம் காதலை முடித்துக் கொள்ள நினைத்த அன்புக்கு சோதனை காலமாக அமைந்துவிட்டது.

ஆனந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டே அவனால் அவனுடைய காதலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் அன்புவின் குடும்பத்தையும் பார்த்த பிறகு ஆனந்திக்கு அவன் மீது அதிகமான பாசம் ஏற்படுகிறது.

ஆனந்தி அன்பு வீட்டில் தங்கியிருப்பது அவனுடைய தங்கை யாழினிக்கும் தெரியும் என்பதால் ஆனந்தி சுதந்திரமாக அந்த வீட்டிலேயே தீபாவளி கொண்டாட ஏற்பாடுகள் நடக்கிறது. மேலும் ஆனந்திக்கு மகேஷ் மற்றும் அன்பு இருவருமே புடவை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

ஆனந்தி எனக்கு அன்பு வாங்கிக் கொடுத்த புடவை தான் ரொம்ப பிடித்திருக்கிறது என மனம் திறந்து சொல்கிறாள். அந்த புடவையை கட்டிக்கொண்டு ஆனந்தி தீபாவளியையும் கொண்டாடுகிறாள். அன்புவின் வீடு மற்றும் அவனுடைய அம்மா மற்றும் தங்கையை தனக்கு ரொம்ப பிடித்து விட்டதாக ஆனந்தி நினைக்கிறாள்.

தன்னுடைய வீடு போலவே அன்புவின் வீடும் இருப்பது அவளுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. மாடியில் பட்டாசு வெடிக்கும் பொழுது திடீரென பயந்து ஆனந்தி அன்புவை கட்டிப்பிடிக்கிறாள் அதே நேரத்தில் அந்த இடத்திற்கு மகேஷ் வருவது போல் காட்டப்பட்டு இருக்கிறது. இந்த காட்சியை நேரில் பார்க்கும் மகேஷ் எந்த மாதிரி ரெஸ்பான்ஸ் பண்ணுகிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News