சிங்கப்பெண்ணில் ஆனந்திக்கு ஏற்பட போகும் அசிங்கம்.. அழகப்பன் குடும்பத்தை காலி பண்ண கூட்டு சதி திட்டம் போட்ட மித்ரா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் ஆனந்திக்கு பெரிய ஆபத்து வர இருக்கிறது. ஊருக்கு ஆனந்தி தீமிதி திருவிழாவுக்கு வர இருப்பதாக தெரிந்த உடனேயே பிரசிடெண்ட் அவளுடைய குடும்பத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்த வேண்டும் என முடிவெடுத்து விட்டான்.

அதே நேரத்தில் மகேஷ் ஆனந்தியின் அப்பா மற்றும் அம்மாவிடம் திருமணத்தைப் பற்றி பேச வேண்டும் என்ற முடிவுடன் தான் ஆனந்தியின் வீட்டில் இருக்கிறான். அன்பும் நான் தான் அழகன் என்று ஆனந்தி இடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும் என காத்திருக்கிறான்.

மித்ரா, தன்னை போலவே ஆனந்தியை பழிவாங்குவதற்கு ஊருக்குள் ஒரு வில்லன் இருக்கிறான் என்று தெரிந்ததும் அவனுடைய திட்டத்திற்கு உதவி செய்வதாக கூட்டு சதி போட்டுவிட்டால். நேற்றைய எபிசோடில் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்டதால் மகேஷ்க்கு கைகளில் காயம் ஏற்பட்டு விட்டது.

இதனால் சாப்பிட முடியாமல் மகேஷ் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்கிறான். இதை பார்த்த வார்டன் உடனே மகேஷிடம் வந்து என்ன ஆச்சு இன்னும் சாப்பிடாமல் தனியாக உட்கார்ந்து இருக்கீங்க என்று கேட்கிறார். உடனே மகேஷ் தன் கையில் பட்ட காயத்தை காட்டுகிறான்.

இதனால் பதறிப் போன வார்டன் மகேஷுக்கு கைகளில் மருந்து போடுவது மட்டுமில்லாமல் சாப்பாடு ஊட்டி விடுகிறார். இவர்களுக்குள் இருக்கும் இந்த அம்மா மகன் சென்டிமென்ட் தற்போது சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களால் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது.

கூட்டு சதி திட்டம் போட்ட மித்ரா

அதே நேரத்தில் மித்ரா பிரசிடெண்ட் இடம் சென்று ஆனந்தியை பழிவாங்க என்னதான் திட்டம் போட்டு வச்சிருக்கீங்க என்று கேட்கிறாள். உடனே பிரசிடென்ட் தன்னுடைய திட்டத்தை பற்றி மித்ராவிடம் பேசுகிறான்.

ஏற்கனவே முந்தைய எபிசோடில் காட்டிய மாதிரி ஆனந்தியின் அப்பாவிடம் கோயில் பொறுப்பை திட்டமிட்டபடி பிரசிடெண்ட் ஒப்படைத்து விட்டான். நெருப்பு மிதிக்கும் விழா நடந்து கொண்டிருக்கும்போதே கோயிலில் உள்ள நகைகளை திருடுவது தான் திட்டம்.

அதே நேரத்தில் ஆனந்தி தீமிதிக்கும் போது ஏதாவது ஒரு அசம்பாவிதத்தை நிகழ செய்து அதை ஊரே பார்க்கும்படி செய்ய வேண்டும். அடுத்த நாள் அம்மனை அலங்கரிக்க நகைகள் இல்லாத போது ஆனந்தியின் வீட்டில் தேடி அந்த நகையை எடுக்க வேண்டும் என்ற தன்னுடைய திட்டத்தை சொல்லி விட்டான்.

அழகப்பனை ஊரில் வைத்து அசிங்கப்படுத்துவது மட்டுமில்லாமல், நெருப்பு மிதிக்கும் பொழுது அசம்பாவிதம் நடந்து விட்டதால் ஆனந்தி காலம் முழுக்க கோயிலை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும், இல்லையென்றால் ஊருக்குள் கெட்டது நடக்கும் என கிளப்பி விட பிரசிடெண்ட் திட்டம் போட்டு இருக்கிறான்.

ஒரே நேரத்தில் இந்த மாதிரி ரெண்டு பிரச்சனை வந்தால் ஆனந்தி மற்றும் அவளுடைய குடும்பம் எப்படி இதை தாங்கிக் கொள்ளும் என்று தெரியவில்லை. இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி நெருப்பு மிதிப்பதற்காக மஞ்சள் புடவை கட்டி வீட்டில் விரதம் இருப்பது போல் காட்டப்படுகிறது.

இதனால் இந்த நேரத்தில் காதல் மற்றும் திருமணம் பற்றி அவளிடம் பேச வாய்ப்பே இல்லை என மகேஷ் உணர்கிறான். இன்னொரு பக்கம் அன்பு நான் தான் அழகன் என்று ஆனந்தியிடம் சொல்ல தயாராகிக் கொண்டிருக்கிறான்.

ஆனால் அதே நேரத்தில் ஆனந்தியோ இனி அழகனை பற்றிய நினைப்பு எனக்கு வரவே கூடாது என வேண்டிக்கொள்கிறாள். ஆனந்தி அழகனை பற்றி நினைக்கவே கூடாது என வெறுக்கும் நேரத்தில் அன்பு நான் தான் அழகன் என்று சொன்னால் அது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.

ஒரு வேளை நகை காணாமல் போய் ஆனந்தியின் வீடு அவமான பட்டால் அணிந்து அந்த இடத்தில் அந்த வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் நான் செய்கிறேன் என தன்னுடைய பண பலத்தை காட்டுவான். இதனால் ஆனந்தியின் அப்பா இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள கூட வாய்ப்ப அதிகமாக இருக்கிறது.

ஆனந்தி மகேசை திருமணம் செய்து கொள்வாளா அல்லது அன்புவின் காதலை ஏற்றுக் கொள்வாளா என்பதுதான் இப்போது சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -