சிங்கப்பெண்ணில் சொந்த மண்ணில் காலடி வைத்ததும் ஆனந்திக்கு ஏற்பட்ட பிரச்சனை.. வில்லனுடன் கை கோர்க்கும் மித்ரா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தி, எல்லோருடனும் தன்னுடைய சொந்த ஊருக்கு கிளம்பிவிட்டாள். ஏற்கனவே ஆனந்தியை பழிவாங்க கிராமத்தில் ஒரு வில்லன் தயாராக இருக்கிறான்.

இது தெரியாமல் ஆனந்தி தன்னுடைய சொந்த ஊருக்கு ரொம்ப சந்தோஷமாக போகிறாள். அன்பு, மகேஷ், சல்மா, ஜெயந்தி, சௌந்தர்யா, முத்து, வார்டன் என ஆனந்திக்கு நெருக்கமான அத்தனை பேரும் ஒரே வண்டியில் போகிறார்கள்.

சொந்த ஊருக்கு கிளம்பிய ஆனந்தி

அது மட்டும் இல்லாமல் கூப்பிடாத விருந்தாளியாக வண்டிக்குள் மித்ரா மற்றும் ஆனந்தியின் அண்ணனும் இருக்கிறான். வண்டிக்கு டிரைவர் ஆக வந்த ஆனந்தியின் அண்ணன் ஆனந்தியை பார்த்ததும் வண்டியை ஓட்ட மாட்டேன் என்கிறான்.

ஆனால் வேறு வழியே வண்டியை ஓட்டியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம். ஊருக்கு நாலு நாட்கள் தங்க செல்வதால் தன்னுடைய சைக்கிளை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என ஆனந்தி வண்டியில் இருந்து இறங்கி ஹாஸ்டலுக்குள் போகிறாள்.

அந்த நேரத்தில் ஆனந்தியின் அண்ணன் வண்டிக்குள் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்து விடுகிறான். ஆனந்தி வந்ததும் வண்டி புறப்பட்டு போய்க்கொண்டிருக்கிறது. ரொம்ப நேரம் அமைதியாக வண்டி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் முத்துவுக்கு ஜெயந்தியின் பக்கத்தில் உட்கார்ந்து பயணிக்க வேண்டும் என ஆசை வருகிறது.

அசடு வழியும் மகேஷ்

இதனால் எல்லோரும் பாட்டுக்கு பாட்டு விளையாட்டு விளையாடலாம் என்று விளையாட்டை ஸ்டார்ட் பண்ணிவிட்டு ஜெயந்தி பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறான். ஹாஸ்டலில் இருப்பவர்கள் ஒரு குரூப், கம்பெனியில் இருப்பவர்கள் ஒரு குரூப் என இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடுகிறார்கள்.

ஆனந்தி ஹாஸ்டல் குரூப்புடன் இருந்தாலும், மகேஷ் முழுக்க முழுக்க ஆனந்திக்கு இந்த விளையாட்டில் சப்போர்ட் செய்வது பார்ப்பதற்கே காமெடியாக இருக்கிறது. அன்பு ஒன்றும் புரியவில்லை சொல்ல தெரியல என்ற பாட்டை பாடிக் கொண்டே ஆனந்தியுடன் டூயட் பாடுவது போல் கனவு காண்கிறான்.

அன்பு, ஆனந்தி டூயட்

கனவாக இருந்தாலும் ஆனந்தியும், அன்பும் ஜோடியாக ஆடுவதை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது. அன்பு பாடி முடித்ததும் மகேஷ் என்ன உன் காதலியை நினைத்து பாட்டு பாடுகிறாயா என்று கேட்கிறான்.

இந்த பாட்டு பாடும் அளவுக்கு அவள் மீது உனக்கு காதலா என கிண்டலாக கேட்கிறான். உடனே அன்பு நான் அந்த பெண்ணை உங்களிடம் காட்டும்போது உங்களுக்கே அது புரியும் என்று சொல்கிறான். இவர்கள் இப்படி சிரித்து, பாடிக் கொண்டு வருவதை பார்ப்பதற்கு மித்ராவுக்கு வயிற்று எரிச்சலாக இருக்கிறது.

இன்றைய ப்ரோமோ

மனதுக்குள் அவளும் ஒரு திட்டம் போட்டுக் கொண்டுதான் ஆனந்தியின் ஊருக்கு வருகிறாள். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தியின் தம்பி தங்கச்சி மேள தாளத்துடன் ஆனந்தியை வரவேற்கிறார்கள்.

ஆனந்தியும் ஊருக்குள் டான்ஸ் ஆடிக் கொண்டே வருகிறாள். அப்போது அந்த வில்லன் ஆனந்தியை அவளுடைய வீட்டின் வாசலில் பார்த்துவிட்டு இப்போதே பிரச்சனையை ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும் என பைக்கில் இருந்து இறங்குகிறான் கண்டிப்பாக அவன் எனக்கு உனக்காக பேசப் போகிறான்.

பின்னர் அன்பு மற்றும் மகேஸ் இருவரும் தங்களுடைய ஆக்சன் காட்சிகளை ஆரம்பிப்பார்கள் என்பது நன்றாக தெரிகிறது. மித்ராவுக்கு ஏற்கனவே ஆனந்தியை எப்படி பழி வாங்குவது என வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறாள்.

எதிர்பார்ப்பை கிளப்பும் வார்டனின் ஃப்ளாஷ்பேக்

இதில் இந்த வில்லன் தான் ஆனந்தியை பழிவாங்க காத்திருக்கிறான் என்று தெரிந்தால் கண்டிப்பாக அவருடன் சேர்ந்து ஆனந்துக்கு எதிராக சதி திட்டம் தீட்ட நிறைய வாய்ப்பு இருக்கிறது. நேற்றைய எபிசோடில் மகேஷ் ஊருக்கு வருகிறான் என்றதும் ஹாஸ்டல் வார்டன் கிளம்பியது, மற்றும் ஒரு விளையாட்டு பொருளை எடுத்து வைத்து ரொம்பவும் சோகமாக யோசித்துக் கொண்டிருந்தது எல்லோருக்குமே பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இன்றைய ப்ரோமோவில் ஹாஸ்டல் வார்டனிடம் மகேஷ் ஏன் எப்போதுமே ஒரு மாதிரி சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறான். அதற்கு வார்டன் எல்லாம் பழைய ஞாபகம் என்று சொல்கிறார். கடந்த இரண்டு நாட்கள் எபிசோடு பார்க்கும் பொழுது மகேஷ் மற்றும் வார்டனக்கு ஏதோ வெயிட்டான பிளாஷ்பாக் இருப்பது தெரிகிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -