புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிங்கப்பெண்ணில் உண்மையை வெளி கொண்டு வரும் முத்து.. அன்பு தான் அழகன் என்று தெரிந்து கொள்ளும் ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று தெரிந்து கொண்ட மகேஷ் இனி ஆனந்தியும் அன்புவும் சந்திக்கவே கூடாது என நினைக்கிறான்.

அழகன் வைத்திருப்பது காதலே அல்ல, நான் தான் ஆனந்தியை உண்மையாக காதலிக்கிறேன் என மகேஷ் விடாப்பிடியாக நினைத்துக் கொண்டிருப்பது தான் இதற்கு காரணம். அன்பு தான் அழகன் என்று தெரிந்த பின் மகேஷ் ஆனந்தியை அவனுடன் சேர்த்து வைத்து விடுவான் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது சீரியலின் வில்லனாக மாறி இருக்கிறான் அன்பு. சாயங்காலம் நீ அன்பு வீட்டுக்கு போக கூடாது நான் உன்னை புது ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போகிறேன் என மகேஷ் சொல்லியிருந்தான் . மகேஷின் வார்த்தையை மீறி ஆனந்தி அன்புவின் வீட்டிற்கு போய்விட்டாள்.

அன்பு தான் அழகன் என்று தெரிந்து கொள்ளும் ஆனந்தி

இது மகேஷுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்துகிறது, ஆனந்திக்கு போன் பண்ணி உடனே கிளம்பி வரும் படி சொல்கிறான். முதலில் கெஞ்சி பேசிய ஆனந்தி பின் தைரியமாக மகேஷை எதிர்த்து என்னால் வர முடியாது என்று சொல்கிறாள்.

உடனே மகேஷ் காரை எடுத்துக் கொண்டு அன்புவின் வீட்டுக்கே வருகிறான். இதை தெரிந்து கொண்ட மித்ரா அவன் பின்னாடியே வந்து அன்பு வீட்டுக்குள் போகவிடாமல் தடுக்கிறாள். இப்போ நீ கோபமாக நடந்து கொண்டால் ஆனந்தி உன்னை மொத்தமாக வெறுத்து விடுவாள் என்று பேசி மகேஷை அங்கிருந்து அழைத்து வருகிறாள்.

அன்புவின் தங்கை யாழினி ஆனந்தியிடம் அன்பு உங்களை காதலிக்கிறான், உங்களுக்கும் அவன் மீது காதல் இருக்கிறது. இந்த காதலால் மட்டும் தான் அவனை பங்களாதேஷிற்கு போகாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று சொல்கிறாள்.

ஆனந்தி முதலில் இதை ஏற்க மறுத்தாலும் பின்னர் யோசிக்கிறாள். அதே நேரத்தில் முத்து அன்பு விடம் மகேஷ் ஒரு சுயநலவாதி உன்னுடைய காதல் தெரிந்தும் இப்படி சுயநலமான வேலையை பார்க்கிறான் என ரொம்பவும் கோபமாக சொல்கிறான்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி என்னுடைய அழகனை என்னிடம் கொடுத்துவிட்டு நீங்க பங்களாதேஷுக்கு போங்க அன்பு என்று சொல்கிறாள். ஒரு வேலை ஆனந்திக்கு அன்பு தான் அழகன் என்று தெரிந்து விட்டதா என தெரியவில்லை. எப்படியும் அன்பு பங்களாதேஷ் போவதற்குள் முத்து மூலம் ஆனந்திக்கு உண்மை தெரிய அதிக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News