புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

சிங்கப்பெண்ணில் வார்டன் ஆட்டத்தை முடித்து வைத்த மித்ரா.. மகேஷை வெளுத்து கட்ட போகும் ஆனந்தி!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது.

ஆனந்தியின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல் ஏன் மகேஷ் மற்றும் வார்டன் ஆனந்தியின் வீட்டுக்கே சென்று பெண் கேட்டு வருகிறார்கள்.

அழகப்பன் இருக்கும் சூழ்நிலையில் அவரும் சட்டென மகேஷ் தான் என் வீட்டு மருமகன் என்று சொல்லி விடுகிறார்.

மகேஷை வெளுத்து கட்ட போகும் ஆனந்தி!

இருந்தாலும் ஒரு பக்கம் தன் பெண்ணின் விருப்பம் என்னவாக இருக்கும் என்ற ஐயம் அவருக்கு இருக்கிறது.

அதனால் இந்த விஷயத்தை ஆனந்தியிடம் சொல்ல வேண்டாம் என மகேஷ் மற்றும் வார்டனிடம் சொல்கிறார்.

ஆனால் வீட்டிற்கு வந்த உடனேயே மகேஷ் அவனுடைய அம்மாவிடம் ஆனந்தி வீட்டுக்கு பெண் கேட்டு போன விஷயத்தை சொல்லி விடுகிறான்.

இதனால் மித்ரா ரொம்பவே டென்ஷன் ஆகி விடுகிறாள். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மித்ரா வார்டனை நேரடியாகவே தாக்குகிறாள்.

ஹாஸ்டலில் தன்னுடைய தோழிகளிடம் இங்கு இருக்கும் எல்லோருக்கும் வார்டன் புரோக்கர் வேலை பார்ப்பார் என்று சொல்கிறாள்.

இதை கேட்ட ஆனந்திக்கு ரொம்பவும் கோபம் வந்து விடுகிறது. எப்படியும் மித்ரா மூலம் ஆனந்தி மகேஷ் மற்றும் வார்டன் தன் வீட்டிற்கு போன கதையை கண்டுபிடித்து விடுவாள்.

கம்பெனிக்கு போகும் ஆனந்தி தன்னுடைய பையை ஜெயந்தியிடம் கொடுத்துவிட்டு மகேசை பார்க்க நேரடியாக செல்கிறாள்.

இதிலிருந்தே மகேஷிடம் அவள் உண்மையை சொல்லப் போகிறாள் என்பதை நன்றாக தெரிந்து விட்டது. ஆனந்தி உண்மையை மகேஷிடம் சொல்கிறாளா அல்லது அன்பு ஆனந்தியை தடுத்து விடுகிறானா என்று இந்த வாரம் வெளியாகும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Trending News