சிங்க பெண்ணில் வசமாக சிக்கிய மித்ரா, கருணாகரன்.. இனிதான் ஆட்டம் சூடு பிடிக்க போகுது

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் டிஆர்பி யில் இந்த வாரம் அடி வாங்கியது. இதனால் இயக்குனர் உஷாராகி சீரியலை பரபரப்பின் உச்ச கட்டத்திற்கு கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக சீரியலின் கதாநாயகி ஆனந்தி ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டே தான் இருந்தாள்.

இதற்கு காரணம் எதற்கெடுத்தாலும் அழுத மூஞ்சியுடன் வசனம் பேசுவதால் தான். இந்த வாரம் தான் சிங்க பெண்ணே என்ற பெயருக்கு ஏத்த மாதிரி தைரியமாக சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறாள். இதற்கு முக்கிய காரணம் ஹாஸ்டல் வார்டன் தான்.

முதலில் பயந்து ஊருக்கே போகிறேன் என்று சொன்ன ஆனந்தியை உன் மீது எந்த தப்பும் இல்லை என்பதை நிரூபித்து விட்டு போ என்று வார்டன் சொல்லி இருந்தார். தற்போது அன்பு மற்றும் தன்னை குடோனுக்குள் வைத்து பூட்டி இவ்வளவு பெரிய பிரச்சனையை பண்ணியது யார் என ஆனந்திக்கு ஒரு அளவுக்கு தெரிந்தது.

வசமாக சிக்கிய மித்ரா, கருணாகரன்

கருணாகரன் மீது சந்தேகம் இருந்ததால் அவனை வெறுப்பேற்றி வேடிக்கை பார்த்தாள். சரியான நேரத்தில் அன்பு வாட்ச்மேனை அழைத்து வந்து அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை கேட்டான். அதற்கு வாட்ச்மேன் கருணாகரன் மற்றும் மித்ரா இருவரும் இணைந்து தன்னை திசை திருப்பியது , வருகை பதிவேட்டில் அன்பு மற்றும் ஆனந்தியின் கையெழுத்து வந்தது என மொத்தத்தையும் சொல்லிவிட்டார்.

இவர்கள் இருவரையும் எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என அன்பு மற்றும் ஆனந்தி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டார்கள். அதன்படி கருணாகரனை அவனுடைய சீட்டில் இருந்து எழுந்து வர வைத்து எல்லோரும் முன்னிலையிலும் அன்பு மற்றும் முத்து பயங்கரமாக பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த நேரத்தில் சௌந்தர்யா கருணாகரனின் செல்போனை எடுத்து விட்டாள். அதேபோல ஆனந்தி மித்ராவுக்கு காபி கொண்டு போய் கொடுத்தாள். அப்போது உங்களுடைய பதவி பற்றி தெரியாமல் நான் இவ்வளவு நாள் உங்களிடம் மோதி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என பேச்சு கொடுத்துக் கொண்டே மித்ராவின் செல்போனை தன் கையில் எடுத்துக் கொள்கிறாள்.

இனிதான் ஆட்டம் சூடு பிடிக்க போகுது

அறையை விட்டு வெளியே சென்ற ஆனந்தியை மீண்டும் மித்ரா கூப்பிடுவது உடன் நேற்றைய எபிசோடு முடிந்ததுl இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் மித்ரா மற்றும் கருணாகரனை லிப்ட்டுக்குள் ஒன்றாக போகும்போது லிப்டை ஆப் செய்து விடுகிறார்கள்.

இருவரும் லிப்ட்டுக்குள் மாட்டிக் கொண்டு தவிப்பது போல் இன்றைய ப்ரோமோ இருக்கிறது. ஒருவேளை இன்றைய எபிசோடில் குடோனுக்குள் அன்பு மற்றும் ஆனந்தி இருந்தபோது கருணாகரன் தவறாக பேசியதை மீண்டும் அன்பு இவர்களுக்கு ஞாபகப்படுத்தலாம்.

அதே நேரத்தில் இருவரின் செல்போனும் தங்களிடம் இருப்பதால் அதை சோதித்து பார்க்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. மித்ராவின் செல்போனை மட்டும் சோதித்துப் பார்த்தால் நந்தா கதையிலிருந்து எல்லாமே வெளிவர அதிக வாய்ப்பு இருக்கிறது.

சிங்க பெண்ணே சீரியலில் இப்போதுதான் ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது. தொடர்ந்து ஆனந்தியின் ஆட்டத்தை இனி வரும் வாரங்களில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -