சிங்கப்பெண்ணில் கொள்ளையர்களை நெருங்கிய ஆனந்தி, உயிருக்கு வந்த ஆபத்து.. காப்பாற்றுவார்களா அன்பு, மகேஷ்?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. சுயம்புலிங்கம் மற்றும் மித்ரா திட்டத்தின் படி கோயிலில் நகையை திருடி விட்டு, அந்த பழியை ஆனந்தியின் அப்பா மீது சுமத்தி விட்டார்கள்.

அம்மனுக்கு சாத்துவதற்கு நகை பெட்டியை திறக்கும் போது அங்கு நகை இல்லை என்றதும் முதலில் அழகப்பன் மீது தான் எல்லோருக்கும் சந்தேகம் வருகிறது. மேலும் எல்லோரும் தீமிதிக்கும் இடத்தில் இருக்கும் பொழுது ஆனந்தி வேலுவை பார்ப்பதற்காக கோயிலுக்குள் சென்று இருந்தாள்.

இதனால் கோவில் பூசாரிக்கு எதனால் ஆனந்தி கோவிலுக்குள் வந்தால் என்ற சந்தேகம் அதிகம் ஆகிவிட்டது. ஊரைக் கூட்டி பஞ்சாயத்து வைத்து நகை காணாமல் போனதை பற்றி அழகப்பன் இடம் விசாரிக்கிறார்கள். அப்போது ஆனந்தியிடம் நீ ஏன் அந்த நேரத்தில் கோவிலில் இருந்தாய் என கேட்கிறார்கள்.

அதற்கு ஆனந்தி என்னுடைய அண்ணன் வேலு அங்கு என்னை வரச் சொல்லி கடிதம் எழுதி இருந்ததாக சொல்கிறாள். இதை எப்படி நம்புவது என பஞ்சாயத்தில் எல்லோரும் கேள்வி கேட்கும் போது வேலுவும் தன்னுடைய தங்கைக்காக சாட்சி சொல்ல வருகிறான்.

அதே நேரத்தில் அழகப்பன் வேலு வந்து சொல்லி தான் நான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று சொல்லிவிடுகிறார். 24 மணி நேரத்தில் நகையை ஒப்படைக்க வேண்டும் என பஞ்சாயத்தில் சொல்லிவிட்டு எல்லோரும் கிளம்பி விடுகிறார்கள்.

எச்சரிக்கை செய்த மித்ரா

வீட்டுக்கு வந்ததும் எல்லோருமே இந்த சம்பவத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வேலு கடிதம் எழுதியது, மித்ராவுடன் அழகப்பன் வீட்டிற்கு வந்தது என எல்லாமே திட்டமிட்டபடி நடந்து இருக்கிறது. இதற்கு பின்னால் கண்டிப்பாக சுயம்புலிங்கம் தான் இருக்கிறான் என அன்பும் மகேஷும் அடித்து சொல்கிறார்கள்.

அதே நேரத்தில் ஆனந்தி கோயிலுக்குள் மலையனை பார்த்ததை பற்றி சொல்கிறாள். உடனே ஆனந்தியின் அப்பா இதைப்பற்றி பஞ்சாயத்தை கூட்டியும் சொல்லலாம் வா என்கிறார். அதே நேரத்தில் ஆனந்தி சொன்ன அடையாளத்தோடு காட்டுக்குள் ஒருவரை பார்த்ததாக அவளுடைய தங்கை சொல்கிறாள்.

திருடனை கையோடு பிடித்துக் கொண்டு போகலாம் என அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் கிளம்புகிறார்கள். இந்த விஷயத்தை வீட்டில் இருக்கும் மித்ரா சுயம்பு லிங்கத்திற்கு சொல்லி எச்சரித்து விடுகிறாள். இவர்கள் மூன்று பேரும் போகும் வழியில் இன்ஸ்பெக்டர் இவர்களை பார்த்து என்ன என்று விசாரிக்கிறார்.

கொள்ளையர்களை நெருங்கிய ஆனந்தி

ஆனந்தி எல்லா விஷயத்தையும் சொன்னதும் இன்ஸ்பெக்டருக்கு மலையனை பலூன் விற்பவனாக பார்த்தது ஞாபகம் வருகிறது. சொன்ன விஷயத்தை அப்படியே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளைன்ட் ஆக எழுதிக் கொடுங்கள் என இன்ஸ்பெக்டர் சொல்கிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மலையனை தேடி அன்பு, மகேஷ் மற்றும் ஆனந்தி ஆளுக்கு ஒரு பக்கம் காட்டிற்குள் போகிறார்கள். ஆனந்தி அந்த கொள்ளை கூட்டகாரர்களை பார்த்ததும் அவர்களிடம் சண்டை போடுகிறாள்.

எதிர்பாராத விதமாக சுயம்புலிங்கம் ஆனந்திக்கு பின்னாடி இருந்து அவளை கட்டையால் தலையில் அடித்து விடுகிறான். மயக்கத்தில் இருந்த ஆனந்தியை உயிருடன் குழியில் போட்டு மண்ணை போட்டு மூடுவது போல் அந்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் அவளை கண்டுபிடித்து காப்பாற்றுவார்களா, அழகப்பனின் மானத்தை காப்பாற்ற நகை யாரால் திருடு போனது என கண்டுபிடிப்பார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -