சன் டிவியில் விஜேவாக பணியாற்றியவர் ஆனந்த் கண்ணன். இவருடைய நகைச்சுவையான பேச்சும் நடிப்பும் ரசிகர்களை பிரபலமடைந்தது. மேலும் சிந்துபாத் எனும் நிகழ்ச்சியில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார்.
அதன்பிறகு இவர் பெரிய அளவில் தொலைக்காட்சிகளில் கவனம் செலுத்தாமல் இருந்தார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.
இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். சிங்கப்பூரில் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டு நேர்காணல் நடத்தி உள்ளார். அதன் பிறகு சன் மியூசிக் நிகழ்ச்சியிலும் தொகுத்து வழங்கி பிரபலமானார். சில வருடமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளை அளித்து வந்துள்ளனர்.
ஆனால் சமீபத்தில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது திரைத்துறையில் இருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தனர். தற்போது ஆனந்த் கண்ணனுடைய திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.