ஆனந்த் ஷங்கர்

பாலிவுட்டில் அசிஸ்டன்ட் ஆக ஆரம்பித்தவர். பின்னர் முருகதாஸுடன் 7 ஆம் அறிவு , துப்பாக்கி படங்களில் பணியாற்றினார். விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி வாயிலாக என்ட்ரி கொடுத்தவர். பின்னர் விக்ரமின் இருமுகன் வாயிலாக தமிழ் மட்டுமன்றி தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்பொழுது விஜய் தேவர்கொண்டவை வைத்து NOTA படத்தை இயக்கியுள்ளார் . இப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தெலுங்கு ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை அளித்தது.

AR Murugadoss Anand Shankar

இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார். அதில் “எனது பெர்சனல் வாழ்க்கை பற்றிய முதல் பதிவு. நான் திண்மை விரும்பி, மூடி, ஷய் ஆசாமி. ஆனால் இந்த தருணத்தில் என் மகிழ்ச்சியை உங்களுடன் பகிரணும் என்று தோன்றியது. உங்களின் ஆசிர்வாதம் எப்பொழுதும் போலவே தேவை” என்பதுடன் போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

கேக்கில் திருமணம் செய்வாயா என்ற வாசகம், உயர் ரக மதுபானம், மோதிரம், கிருஸர் கப்பலில் சென்று துபாயில் தன் திருமண ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.

சினிமா பாணியில் அசத்தி விட்டாரப்பா இயக்குனர் என்று கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகின்றனர்.