சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

90ஸ் கிட்ஸ் ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை.. நிறைவேற்றிய மனைவி.!

சன் டிவியில் பிரபல தொகுப்பாளராக அறிமுகமாகி, அதன் பின் சிந்துபாத், விக்ரமாதித்தன் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் ஆனந்த் கண்ணன். இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடிய ஆசன குடல் புற்று நோய், தற்போது வயது குறைந்தவர்களுக்கும் ஏற்படுகிறது. அத்தகைய புற்றுநோய் தான் ஆனந்த் கண்ணன் உயிரிழப்பிற்கு காரணமாய் அமைந்து விட்டது.

இவருடைய மரணம் அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. மேலும் இவருடைய இறப்பிற்கு திரைத்துறையினரும், அவர்களுடைய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆனந்த் கண்ணனுடைய தோழி ஒருவர், ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை என்ன என்பதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்னவென்றால், ஆனந்த் கண்ணன் தன்னுடைய இறுதி ஊர்வலத்தை கல்யாண ஊர்வலம் போன்று மேளதாளத்துடன் கொண்டு செல்லும்படியும்,

anandha kannan
anandha kannan

தன்னுடைய இறப்பு நிகழ்வில் யாரும் அழுக கூடாது. சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்’ என்று தன்னுடைய கடைசி ஆசையை தனது மனைவியிடம் கூறியுள்ளார் ஆனந்த் கண்ணன்.

ஆகையால் ஆனந்த் கண்ணனின் மனைவியும், அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார். எனவே இத்தகைய தகவல்களை அறிந்து கொண்டுள்ள அவருடைய ரசிகர்கள், தற்போது சமூக வலைதளங்களில் ஆனந்த் கண்ணனைப் பற்றி அதிகமாகப் பேசி வருகின்றனர்.

- Advertisement -

Trending News