fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தாத்தா நாகேஷ் போல் நடிப்பில் களமிறங்கிய ஆனந்த்பாபு மகன்கள்.. வைரலாகும் குடும்ப புகைப்படம்

nagesh-anand-babu-family-photos-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தாத்தா நாகேஷ் போல் நடிப்பில் களமிறங்கிய ஆனந்த்பாபு மகன்கள்.. வைரலாகும் குடும்ப புகைப்படம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்று சிலை வைத்து கொண்டாடப்பட்டவர் நாகேஷ். இவரின் மகன் ஆனந்த்பாபு 1983 சினிமாவில் அறிமுகமானவர்.

80, 90-களில் பல குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும், புகழும் பெற்றவர். ஆனந்த்பாபு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி சில காலங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, விஜய் டிவியின் பிரபல சீரியலான மௌனராகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் அவருக்கு சின்னத்திரையில் re-entry கொடுக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் பல சோதனைகளை சந்தித்து தற்போது சினிமாவிலும் நடிக்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளன, அதில் மூன்று ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனந்த்பாபுவின் இரண்டு மகன்களின் பெயர் பிஜேஷ்,கஜேஷ். இவர்கள் இருவரும் தற்போது நடிகர்களாக அவதரித்துள்ளனர்.

பிஜேஷ் தற்போது சந்தானம் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்துள்ளார். கஜேஷ் ‘கல்கண்டு’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படம் 2014-லில் வெளிவந்துள்ளது.

தற்போது இவர்கள் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

anand-babu-family-cinemapettai-1

anand-babu-family-cinemapettai-1

anand-babu-family-cinemapettai-1

anand-babu-family-cinemapettai-1

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top