Anjali-Role-in-Iraivi-Movieஅங்காடித்தெரு அஞ்சலியைப் பொறுத்தவரை எப்எம் ரேடியோ மாதிரிதான். அவரிடத்தில் பேசத் தொடங்கினால், தான் நடிக்கும் படங்களைப்பற்றி எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் மடைதிறந்தார் போன்று கொட்டித்தீர்த்து விடுவார். இப்படி பல சமயங்களில் உளறி கொட்டியதற்காக டைரக்டர்களின் கோபத்துக்கு அவர் ஆளாகியிருக்கிறார். இதனால் இப்போது அஞ்சலி நாயகியாக நடிக்கும் பட டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்லும்போது எந்த விசயத்தையும் வெளியில் அவுட் பண்ணி விடக்கூடாது என்று அவரிடம் கண்டிசனாக சொல்லி வாய்ப்பூட்டு போட்டு விடுகின்றனர்.

அந்த வகையில், தற்போது தமிழில் இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இதில் இறைவி படத்தில் அவர் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால், இதற்கு முன்பு எப்போதும் பார்த்திராத ஒரு மதிப்பு மிக்க கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளாராம். குறிப்பாக, இறைவி என்று இறைவனுக்கு இணையாக பெண்களை குறிப்பிடும் கதை என்பதால் அதில் அஞ்சலியின் வேடம் சிறப்பு மிக்கதாம்.

அதனால் அந்த படத்தில் அவரை கமிட் பண்ணியபோது, படம் திரைக்கு வருவது வரை எந்தவொரு விசயத்தையும் அவுட் பண்ணி விடக்கூடாது என்று உறுதிமொழி வாங்கி விட்டாராம் கார்த்திக் சுப்புராஜ். அதன்காரணமாகதான், மீடியாக்களிடம் சரளமாக பேசுவதை சமீபகாலமாக தவிர்த்து வருகிறாராம் அஞ்சலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here