Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேவலமாக பதிவிட்ட ரசிகர்.. அசிங்கப்பட்ட சந்தானம் பட நடிகை

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பலர் நடிகர் மற்றும் நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரசிகருடன் உரையாடுவது மெசேஜ் செய்வது என சில சேட்டைகள் செய்வது வருகின்றனர்.

அப்படி விளையாட்டாக நடிகை பதிவிட்ட பதிவிற்கு ரசிகர் ஒருவர் வித்தியாசமாக பதிவிட்டு உள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத்தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனைகா சோட்டி. அதன்பிறகு ஜீவாவுடன் கீ, அதர்வாவுடன் செம போதை ஆகாதே மற்றும் சந்தானத்துடன் பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் நடித்துள்ளார்.

இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் தங்களுடைய ரகசியமான தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் பதிவிட்டுள்ளார்கள்.

anaika soti

anaika soti

வரிசையாக ஒவ்வொரு ரசிகரும் ஒவ்வொரு பதிவை பதிவிட ஒரு குசும்பு கார ரசிகர் மட்டும் நான் உங்களைப் போன்ற அழகான பெண்களுக்கு உட்காரும் நாற்காலியாக இருக்க வேண்டுமென பதிவிட்டுள்ளார்.

anaika soti fans reply

anaika soti fans reply

இதனை பார்த்த அனைகா சோட்டி கடுப்பாகி உங்கள் பெற்றோர் நீங்கள் இன்ஜினியர் ஆவீர்கள், டாக்டர்கள் ஆவீர்கள் என லட்சக்கணக்கில் பணத்தை போட்டு படிக்க வைத்தால் நீங்கள் வெறும் 250 ரூபாய் நாற்காலி ஆக வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் என கடுமையாக திட்டியுள்ளார்.

தற்போது இந்த பதிவு தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் நடிகை அனைகா சோட்டி மற்றும் அந்த ரசிகர் இருவரையுமே பல ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள்அனைகா சோட்டி இந்த மாதிரி கேள்வி கேட்டதால் தானே இந்த மாதிரியான பதில்கள் வந்தது. அவர் அமைதியாக இருந்தால் இந்த மாதிரி பதில் வந்திருக்குமா எனவும் கூறிவருகின்றனர்.

Continue Reading
To Top