Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரட்டை அர்த்த வசனம், பிட்டு காட்சிகள் இல்லாத படத்திற்கு ஆதரவு தாருங்கள் – தயாரிப்பாளர் ஜே சதிஷ் குமார் !
அண்டாவ காணோம்
ஒருகாலத்தில் எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் வாயிலாக ஏராளமான இளைஞர்களை கவர்ந்திழுத்தவர் ஸ்ரேயாரெட்டி, பின்னர் விஷாலின் அண்ணன் அஜய்கிருஷ்ணாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்துகொண்டவர்.

shreya reddy
ஹீரோயினாக ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் ஜூன் 29 வெளிவரப்போகும் ‘அண்டாவக் காணோம்’ . சி.வேல்மதி என்பவர் இயக்கியிருக்கிறார். ஆசை ஆசையாக தன் அண்டாவை பாதுகாக்கும் கிராமத்துப் பெண், அந்த அண்டா காணாமல் போனால் எவ்வளவு பதற்றப்படுவாள்? அந்த அண்டா மீண்டும் கிடைத்ததா? இதுதான் கதை.

Andaavai Kannom
ஜே எஸ் கே பிலிம் கார்ப்
ஜே சதிஷ் குமார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் ஹாலிவுட் படங்களை தமிழில் டிஸ்ட்ரிபியூட் செய்தனர். பின்னர் ஆடியோ ரிலீஸ், பட ப்ரொடக்ஷனிலும் இறங்கினர். ஏற்கனவே தங்க மீன்கள், குற்றம் கடிதல் படங்களுக்காக தேசிய விருதை பெற்ற நிறுவனம். இவர்கள் தயாரிப்பில் தான் இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி முடிவானதும் தயாரிப்பாளர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை சாடி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். இந்த டீவீட்டை வைரலாகி உள்ளது.
#Andavakaanom from June 29th a complete family fun entertainment censored genuinely "U" so even "A" audience also can watch No vulgar dialogues No bitu scene No need tissue papers No need to hide and watch in https://t.co/QUROBDkt1D good films also @sriyareddy @LeoVisions @Divo pic.twitter.com/XSC8lID1gp
— J Satish Kumar (@JSKfilmcorp) May 7, 2018
“அண்டாவை காணோம் படம் ஜூன் 29 ரிலீசாகிறது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய யூ செர்டிபிகட் படம். இரட்டை அர்த்த வசனம் இல்லை, பிட்டு காட்சிகள் கிடையாது, டிஸ்ஸு பேப்பரும் தேவையில்லை. மறைந்து சென்று திரையில் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. நல்ல படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்.” என்று அதில் கூறியுள்ளார்.
இவருக்கு ஆதரவாக பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.
Surely @JSKfilmcorp sir. Audience will certainly patronize good films also not just films requiring 'tisse papers' to watch it. Be confident…ha ha??✍️ https://t.co/gi6q1ASxsF
— Dhananjayan BOFTA (@Dhananjayang) May 7, 2018
சினிமாபேட்டை காமெண்ட்ஸ்
வித்தியாசமான கதை களத்துடன் திரைக்கு வரப்போகும் இப்படம், தமிழ் சினிமாவின் பெருமையை உலகத்திற்கே சொல்லும் வகையில் அமைவதோடு மட்டுமன்றி நிறைய விருதுகளை வாங்குவதற்கு சினிமாபேட்டையின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
