இளையராஜாவிடம் காலில் விழுந்து கெஞ்சியும் இறங்காத மனசு.. பிடிவாதத்தால் பலிக்கடாக மாட்டிய நடிகர்

80, 90களில் வெளிவந்த படம் இன்னமும் உயிர் வாழ்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்கள் தான். அப்படிப்பட்ட இவரிடம் இசைஞானம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் தான் என்னமோ கர்வமும் அதிகரித்து இருக்கிறது. அது எந்த வகையில் என்றால் மற்றவர்களை உதாசீனப்படுத்தும் அளவிற்கு இவருடைய நடவடிக்கைகள் இருந்திருக்கிறது. இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிப்பு அடைந்திருக்கிறார்கள்.

ஆனால் அப்பொழுது அவர்களால் வெளி கொண்டுவர முடியாத விஷயங்களை இப்பொழுது ஒவ்வொருத்தராக பட்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அதில் சமீப காலமாக அதிக அளவில் பெயர் அடிபட்டு வருவது இளையராஜா தான். அதாவது இவரை மீறி வேற யாரும் ஜெயித்து விடக்கூடாது.

Also read: இந்த 4 இசையமைப்பாளர்களை வளர விடாமல் தடுத்த இளையராஜா.. வல்லவனுக்கு வல்லவனாக வந்த இசைப்புயல்

அதே நேரத்தில் பேரும் புகழும் மற்றவர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் மிகவும் பொறாமை குணம் கொண்டவராக இருந்திருக்கிறார். அதாவது அப்போதைய காலத்தில் யாராவது புது இயக்குனர்கள் முதல் முதலாக படம் எடுக்க வேண்டும் என்றால் அதில் கண்டிப்பாக இளையராஜாவின் இசை தான் இருக்கும்.

அப்படித்தான் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் முதன் முதலாக ஒரு படத்தை எடுப்பதில் ஆர்வமாக இருந்தார். அந்த நேரத்தில் பாக்யராஜ் பார்த்திபனின் நண்பராக இருந்ததால் நான் இசையமைத்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பார்த்திபன் என்னுடைய முதல் படத்தில் இளையராஜா தான் இசை அமைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: என்ன ஒரு கேவலமான தற்பெருமை.. இளையராஜாவின் முகத்திரையை கிழித்த சூப்பர் ஸ்டார்

இதை கேட்ட பாக்யராஜ் ஒன்னும் பிரச்சனை இல்லை நீ முதலில் போய் அவரிடம் சொல்லி சம்மதத்தை வாங்கிட்டு வா என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு இவரும் இளையராஜாவிடம் போய் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் நான் ஏன் இசையமைக்க வேண்டும் அதுதான் இப்போ எல்லாரும் வாசிக்கிறார்களா அவங்க கிட்டயே போய் கேளு என்று கெட் அவுட் சொல்லி இருக்கிறார்.

இந்த காரணத்தினாலேயே பார்த்திபன் எடுக்க நினைத்த முதல் படம் அப்படியே நின்று போய்விட்டது. ஏனென்றால் இளையராஜாவை பகைத்துக் கொண்டு எந்த விஷயத்தையும் செய்ய முடியாது என்று அவர் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார். பின்பு மறுபடியும் வேற ஒரு கதையை கொண்டு போய் இசையமைக்க சொல்லி காலில் விழுந்து கெஞ்சி கேட்டிருக்கிறார்.

ஆனால் அப்பொழுதும் முடியாது என்று சொல்லிவிட்டார். அதாவது இளையராஜா பொருத்தவரை அவருக்கு அடுத்து யாரும் மியூசிக் வாசிச்சிட கூடாது. கடைசியில் இவருடைய பிடிவாதத்தால் பார்த்திபன் பலிக்காடாக ஆனது தான் மிச்சம்.

Also read: மேடையில் மயிரை வைத்து விக்ரமை வாரிவிட்ட பார்த்திபன்.. தங்கலான் கொடுத்த பதிலடி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்