செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அண்ணாத்த பார்த்து விட்டு வெளியே வந்த சூர்யா.. தவறு செய்து விட்டோமே என நினைத்த தருணம்

Suriya : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் புரோமோஷன் இப்போது படு பயங்கரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த சூழலில் கங்குவா படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். இந்நிலையில் சிறுத்தை சிவாவின் மற்றொரு படமான அண்ணாத்த படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சூர்யா வெளியே வந்திருக்கிறார். அப்போது அவருக்கு நடந்த அனுபவம் ஒன்றைக் கூறியிருந்தார்.

அதாவது தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது முதியவர் ஒருவர் ஜெய் பீம் டிக்கெட் கிடைக்குமா என்று கேட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது சூர்யா ஜெய் பீம் படத்தை தியேட்டரில் பார்க்க முடியாது, ஓடிடியில் தான் பார்க்க முடியும் என்று கூறினாராம்.

சூர்யாவை வருத்தத்தில் ஆழ்த்திய சம்பவம்

நான் சொன்னது அவருக்குப் புரிந்ததா என்று கூட தெரியவில்லை என்று சூர்யா வேதனைப்பட்டாராம். அப்போதுதான் ஜெய் பீம் படத்தை தவறாக ஓடிடியில் வெளியிட்டு விட்டோமே என்ற வருத்தப்பட்டு இருக்கிறார். நல்ல படங்கள் இது போன்று எல்லா தரப்பு மக்களிடமும் சென்றடைய வேண்டும்.

அதற்கு தியேட்டர் ஒரு நல்ல வழியாக இருக்கிறது. பலருக்கும் ஓடிடி குறித்து இன்னும் பெரிய அபிப்பிராயம் கிடைக்கவில்லை. ஜெய் பீம் போன்ற படங்கள் எல்லாரும் பார்த்து கொண்டாடப்பட வேண்டிய படம் என்று சூர்யா கங்குவா பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

மேலும் கங்குவா படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள். சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக இப்படம் அமைய உள்ளது.

- Advertisement -

Trending News