Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 தலைமுறை தாண்டி தொடரும் வாரிசு நடிகை.. ஐந்தாவதாக தயாராகி வரும் கொள்ளுப்பேத்தி

தமிழ் சினிமாவில் நான்கு தலைமுறைகளை தாண்டி ஐந்தாவது தலைமுறையும் ஹீரோயினாக களமிறங்க உள்ளார்.

சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் வாரிசு நடிகைகளும் இப்போது சினிமாவில் களம் கண்டு வருகிறார்கள். பெரும்பாலும் தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் தான் வாரிசுகள் அதிகம் சினிமாவில் நுழைவார்கள். இதை தமிழ் சினிமாவில் ஒப்பிடும்போது குறைவு தான்.

ஆனால் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளை தாண்டியும் ஒரு குடும்பத்தில் வாரிசுகள் தொடர்ந்து ஹீரோயின்களாக அவதரித்து உள்ளனர். இது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம் என்றாலும் ஐந்தாவது தலைமுறை ஹீரோயினும் இப்போது உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

Also Read : சுதா கொங்கராவுக்கு முன்பே சாதனை படைத்த பெண்மணி.. முதல் பெண் ஹீரோயின், இயக்குனரான சிங்கப்பெண்

அந்தக் குடும்பத்தின் முதல் திரை வாரிசாக ஜானகி என்ற பெண்மணி சினிமாவில் நடித்து வந்தார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் குமாரி ருக்மணி குழந்தை நட்சத்திரம் ஆகவே சினிமாவில் அறிமுகமானார். ஒரு காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து வந்த அவர் அதன் பிறகு எம்ஜிஆருக்கு அம்மா வேடங்களிலும் நடித்தார்.

இதைத்தொடர்ந்து ஒய் வி ராவ் அவர்களை ருக்மணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர்தான் பிரபல நடிகை லட்சுமி. பாட்டி, அம்மாவை தாண்டி சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். எம்ஜிஆர், சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட பட்டையை கிளப்பி உள்ளார்.

Also Read : எம்ஜிஆருக்கு நிகராக நான் பார்த்த ஒரே ஹீரோ.. 12 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த நடிகர் சோ

லட்சுமியை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா லட்சுமி நான்காவது தலைமுறை நடிகையாக சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு கொள்ளு பாட்டி முதல் பேத்தி வரை சினிமாவில் ஜொலித்துள்ளார்கள்.

ஆனால் இன்னும் சினிமாவில் இவர்களது வாரிசு தொடர உள்ளனர். அதாவது ஐஸ்வர்யாவுக்கு அனைனா என்ற மகள் உள்ளார். இப்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இவரும் ஐந்தாவது தலைமுறையாக சினிமாவில் வர அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Also Read : ஒரே பாட்டை வைத்து கலாய்த்து தள்ளிய எம்ஜிஆர், நம்பியார்.. சிவாஜி கணேசனுக்கு கொடுத்த ஓவர் டார்ச்சர்

Continue Reading
To Top