பவி டீச்சருக்கு தூண்டில் போட்ட நகுல், எல்லை மீறிய டார்ச்சர்.. உதவி இயக்குனரின் வைரல் பேட்டி

Nakkhul: நடிகர் நகுல் மீது உதவி இயக்குனர் ஒருவர் பரபரப்பு புகார்களை அடுக்கி இருக்கிறார். நகுல் நடிக்கும் படங்களில் அட்ஜஸ்ட்மென்ட் டீல் இருப்பதாகவும் அந்த இயக்குனர் பேசியிருக்கிறார். நம்மில் பலருக்கும் பிடித்தமான நடிகை தேவயானியின் தம்பியாக பரீட்சயமானவர்தான் நகுல்.

பாய்ஸ் படத்தில் அதிக உடல் பருமனுடன் நடித்திருந்த நகுல் சில வருடங்களுக்குப் பிறகு உடல் எடையை வெகுவாக குறைத்து காதலில் விழுந்தேன் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

அதை தொடர்ந்து நகுல் நடித்த சில படங்கள் ஆவரேஜ் ஹீட் கொடுத்தது. அதன் பின்னர் இன்றுவரை ஒரு வெற்றி படத்திற்காக தவமாய் தவம் கிடக்கிறார் நகுல். சமீபத்தில் இவர் வாஸ்கோடகாமா என்னும் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. படம் ரிலீஸ் ஆன கையோடு அந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்த ஏ எம் சந்துரு என்பவர் நகுலுக்கு எதிராக பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

பவி டீச்சருக்கு தூண்டில் போட்ட நகுல்

அதில் வாஸ்கோடகாமா படப்பிடிப்பு சமயத்தில் நகுல் சந்துருவுக்கு போன் பண்ணி காண்டம் வாங்கி வர சொன்னாராம். அதற்கு சந்துரு மறுத்து விட்டாராம். அதன் பின்னர் படத்தின் கடைசி பத்து நாள் படப்பிடிப்புக்கு சந்துருவுக்கு அழைப்பு வரவில்லை.

அது மட்டும் இல்லாமல் பட டைட்டில் கார்டில் கூட சந்துருவின் பெயர் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் சந்துரு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அந்த படத்திற்காக பணிபுரிந்து இருக்கிறார். மேலும் இந்த படத்தில் முதலில் சகாய பிரகீடா தான் ஹீரோயின் ஆக நடிக்க இருந்ததாம்.

அவரிடம் நகுல் அட்ஜஸ்ட்மென்ட் எதிர்பார்த்திருக்கிறார். இதை தெரிந்து கொண்ட பிறகுதான் படப்பிடிப்புக்கு அப்பாவுடன் வர ஆரம்பித்திருக்கிறார். அவர் எப்போதும் அப்பா உடனே இருப்பதால் நகுலால் அவரை அணுக முடியவில்லை. இதனால் பிரகீடாவை அந்த படத்தில் இருந்தே தூக்கி விட்டதாக உதவி இயக்குனர் சந்துரு குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News