Connect with us
Cinemapettai

Cinemapettai

tamil-actress-gossip-1

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

விலைமாதுவாக நடிக்க ஆசைப்படும் கொழுக் மொழுக் நடிகை.. திறமையை நிரூபிக்க இப்படி ஒரு ஆசையா!

முன்னணி நடிகைகள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் நடிகைகள் கூட தற்போது தங்களுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் தான் நடிக்க சம்மதிக்கிறார்கள். பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளில் தலையை காட்டி விட்டு செல்வது போன்ற கேரக்டர்களை அவர்கள் விரும்புவது கிடையாது.

அதனால் புதுமுக நடிகைகள் கூட சில சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வளர்ந்து வரும் நடிகை ஒருவர் விலைமாதுவாக நடிக்க ஆசைப்படுகிறாராம். சின்னத்திரையில் இருந்து நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை தற்போது கைவசம் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கிறார்.

Also read : எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை

அதில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் இருக்கிறது. இப்படி பிசியாக இருக்கும் வேளையில் தான் நடிகைக்கு இப்படி ஒரு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் அந்த நாயகி சமீபத்தில் விலைமாது கேரக்டரில் நடித்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.

அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தான் இந்த நாயகி ஆசைப்படுகிறார். இதன் மூலம் தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியும் என்பது தான் அவருடைய எண்ணம். ஆனால் கோலிவுட்டில் இதுபோன்று விலைமாது கேரக்டரில் நடித்த நடிகைகளின் கதி என்ன என்பது எல்லோருக்குமே தெரியும்.

Also read : காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!

அது போன்ற கேரக்டரில் நடித்ததால் சிரிப்பு நடிகை, ச நடிகை ஆகியோருக்கு மார்க்கெட் சரிந்தது. அதையெல்லாம் பார்த்தும் கூட இந்த நடிகை அப்படி ஒரு கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறாரே என்று சினிமா வட்டாரத்தில் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த நடிகை வி நடிகருடன் ஒரு திரைப்படத்தில் படு நெருக்கமாக நடித்தார். அதன் மூலம் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்று விடலாம் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. படம் வெளியான பிறகு நடிகை நடித்த ஒரு காட்சி கூட இடம்பெறவில்லை. அதனால் தான் நடிகை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறாரோ என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read : நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மஜாவான சீரியல் நடிகை.. நெருக்கத்தால் பறிபோகும் பட வாய்ப்பு

Continue Reading
To Top