எம்ஜிஆரை எதிர்த்து நின்ற ஒரே நடிகை.. உங்க இஷ்டத்துக்கு நடிக்க முடியாது, சம்பளத்தை திருப்பிக் கொடுத்த அவலம்

MGR Movie: மக்கள் திலகம் எம்ஜிஆர் என்றால் அப்போதைய சினிமா கலைஞர்களுக்கு, அவர் மீது மரியாதை கலந்த பயம் ஒன்று இருக்கும். இதற்கு அவருடைய குணம் தான் காரணம். எந்த அளவுக்கு ஒருவரை ஆதரிக்கிறாரோ, அதே அளவுக்கு தன்னை எதிர்ப்பவர்களை விட்டு வைத்து கூட பார்க்க மாட்டார் எம்ஜிஆர். இதை பல பேட்டிகளில் அவருடன் நடித்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

எம்ஜிஆர் உடன் இணைந்து ஒரு நடிகை படம் பண்ண வேண்டும் என்றால், அவர் வேறு எந்த ஹீரோக்களின் படங்களிலும் ஒப்பந்தமாக கூடாது. குறிப்பிட்ட வருடத்திற்கு என காண்ட்ராக்ட் போட்டு விடுவார் எம்ஜிஆர். இதனால் தான் நிறைய நடிகைகள், தொடர்ந்து அவர் படத்தில் நடிப்பது போல் இருக்கும்.

Also Read:கலைஞரின் வாரிசை வளரவிடாமல் செய்த எம்.ஜி.ஆர்.. ஒரே ஒரு வார்த்தையில் ஓடிப் போன தயாரிப்பாளர்

எம்ஜிஆரின் படத்தில் நடித்த எல்லா நடிகைகளுமே, அவர் சொல்லியதை மீறாமல் தலையாட்டி பொம்மைகளாகவே இருந்திருக்கிறார்கள். அது போன்ற ஒரு சூழ்நிலையிலேயே நடிகை ஒருவர், எம்ஜிஆரின் கண்களில் விரலை விட்டு ஆட்டி இருக்கிறார். தைரியமாக அவர் முன் எதிர்த்து பேசி, படத்திலிருந்து விலகியும் இருக்கிறார்.

1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்து, இயக்கி, தயாரித்த படம் தான் நாடோடி மன்னன். இந்த படம் அந்த காலத்திலேயே ஒரு கோடி வரை வசூல் செய்தது. படத்தில் முதலில் ஹீரோயின் ஆக நடித்தவர் தான் நடிகை பானுமதி. இவருக்கு எம்ஜிஆர் டைரக்ஷன் செய்யும் முறை சுத்தமாக பிடிக்கவில்லை. இயக்குனரை மாற்றினால் தான் இனி இந்த படத்தில் நடிப்பேன் என பலமுறை சண்டையிட்டு இருக்கிறார்.

Also Read:எம்ஜிஆரை பார்த்து பதுங்கிய சிவாஜி.. பூரித்துப்போன மக்கள் திலகம்

ஆனால் எம்ஜிஆர், அதை கண்டு கொள்ளாமல் அவருடைய வேலைகளை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பானுமதி, இனி இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என ஒரு லெட்டரில் எழுதி, கொடுத்த சம்பளத்தின் காசோலையையும் அதனுடன் இணைத்து, எம்ஜிஆரின் மனைவி ஜானகிக்கு அனுப்பிவிட்டு படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

உடனே எம்ஜிஆர், படத்தின் இடைவேளைக்கு முன்பே பானுமதி இறந்தது போல் கதையை மாற்றிவிட்டு, அதன் பின்னர் சரோஜா தேவியை வைத்து படத்தை முடித்திருக்கிறார். என்னதான் பானுமதி பாதியிலேயே படத்தை விட்டு விலகி இருந்தாலும், அவருடைய கடின உழைப்பு மற்றும் நேர்மைக்காக, அவர் நடித்த எந்த ஒரு காட்சியையும் அந்த படத்தில் இருந்து நீக்கவே இல்லையாம்.

Also Read:ஜெயலலிதாவை வேவு பார்க்க வந்த தில்லாலங்கடி லேடி.. நம்பிக்கை இல்லாமல் எம்ஜிஆர் செய்த வேலை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்