ஓவர் நைட்டில் ஒபமான ஷங்கரின் ஹீரோயின்.. நாகார்ஜுனா வெங்கடேஷ் என எல்லோரும் வரிசையில் நின்னு போட்ட துண்டு

An actress who gained a leading position by acting in director Shankar’s film: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் நம் ஞாபகத்திற்கு வருபவர் சங்கர் மட்டுமே. இவர் படத்தில் கதையை தாண்டி கதாபாத்திரமும், நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுவது உண்டு. ஜென்டில்மேன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் சங்கருக்கு அடுத்த படம் காதலனாக அமைந்தது.

தான் இயக்கும் படத்தில் பிரம்மாண்டத்தோடு சமூக அவலங்களையும் அதை சாமானியன் எதிர்கொள்ளும் முறையையும் அழகாக படம் பிடித்து காட்டியிருப்பார் சங்கர். காதலன் திரைப்படத்தில் சாதாரண குடிமகனுக்கும் ஆளுநரின் மகளுக்கும் உண்டான காதலை பரதநாட்டிய கலையை பின்புலமாக வைத்து வெளிப்படுத்தி இறுதியில் தீவிரவாதத்திலிருந்து மக்களை காப்பாற்றுமாறு விறுவிறுப்புடன் அமைத்திருந்தார்.

காதலன் திரைப்படத்திற்கு ஹீரோவாக பிரபுதேவாவை தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தேர்ந்தெடுக்க படத்தின் நாயகிகக்கான தேடுதல் வேட்டையில் இறங்கினார் சங்கர். ஜென்டில்மேன் வெற்றிக்கு பின் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகள் சங்கர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட போதும் புதுமுகம் வேண்டும் என்று அலைந்து திரிந்தார் சங்கர்.

Also read: ஐஸ்வர்யா ராய்க்கு பிளாக்பஸ்டர் ஹிட்டான 4 படங்கள்.. சங்கர் சூப்பர் ஸ்டாரை வைத்து விட்ட தூது

அப்போதுதான் மாடலிங் துறையில் இருந்து பாலிவுட்டில் அறிமுகமாகி பின் தெலுங்கில் நடித்த நக்மாவை கண்டார் சங்கர். அவரை பார்த்த மாத்திரத்திலேயே காதலன் படத்திற்கான ஹீரோயின் இவர்தான் என்று முடிவு செய்தார். காதலன் படத்தின் அறிமுக காட்சியில் இருந்தே, நடிப்பில் தன் திறமையை திறம்பட வெளிப்படுத்திய நக்மா அவர்கள் இத்திரைப்படத்திற்காக ஃபிலிம்பேர் விருதையும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனின் வெற்றிக்கு பின்பு தெலுங்கில் வெங்கடேஷ், நாகார்ஜுனா என முன்னணி நடிகர்கள் படத்தில் நக்மாவை நடிக்க வைக்க கால்ஷீட் கேட்டு வரிசையில் நின்றனர். தொடர்ந்து ரஜினியுடன் பாட்ஷா படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நக்மா, தொடர்ந்து சத்யராஜ் உடன் வில்லாதி வில்லன், கார்த்திக்குடன் மேட்டுக்குடி, சரத்குமார் உடன் ஜானகிராமன், அஜித்துடன் சிட்டிசன் போன்ற பல படங்களில் நடித்தார் நக்மா.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், வங்காளம், போஜ்புரி என பல மொழிகளிலும் நடித்த நக்மா 2008 இல் நடிப்புக்கு முழுக்கு போட்டு  அரசியலில் குதித்து சமூகப் பணிகள் ஆற்றி வருகிறார். 48 வயது ஆன போதும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நக்மா அவர்கள், திருமணம் செய்யாமலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று ரசிகர்களுடன் பகிர்ந்து உள்ளார்.

Also read: திருமணம் ஆகாமலேயே நக்மா குடும்பம் நடத்திய 4 பிரபலங்கள்.. லிவிங் டுகெதர் போதும் என மாறிய ஒண்டிக்கட்டை

Next Story

- Advertisement -