புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஆனா எனக்கு ஜாலியா தான் இருக்கு.. தனுஷ், நயன்தாரா சண்டையை என்ஜாய் செய்யும் பிரபலம்

Dhanush-Nayanthara: கடந்த பத்து நாட்களாக சோசியல் மீடியாவில் தனுஷ், நயன்தாரா சண்டை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அது கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது தனுஷ் தொடர்ந்துள்ள வழக்கு மூலம் சர்ச்சை வெடித்துள்ளது.

நயன்தாராவின் ஆவண படத்தில் நானும் ரவுடிதான் படக் காட்சிகளை வைக்க தனுஷ் அனுமதி அளிக்கவில்லை என்பது தான் பஞ்சாயத்து. அதை நயன்தாரா டீல் செய்த விதம் விமர்சனத்திற்கு ஆளானது. அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. அனுமதி இல்லாமலேயே சில நொடி காட்சிகளை அவர் பயன்படுத்தி இருந்தார்.

அது மட்டுமா தயாரிப்பாளர் ஆகாஷ் திருமண விழாவில் அவர் நடந்து கொண்ட முறையும் தனுஷ் ரசிகர்களை கோபப்படுத்தியது. இப்படி வேண்டுமென்றே தனுசை சீண்டினார் நயன்.

ஆனால் தனுஷ் தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் வராமல் இருந்தது. திடீரென பார்த்தால் அனுமதி இல்லாமல் நானும் ரவுடிதான் படக் காட்சிகளை பயன்படுத்தியதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

எனக்கு ஜாலியா தான் இருக்கு

இதற்கு நயன் விக்னேஷ் சிவன் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதற்கும் நயன் பக்கம் பக்கமாக அறிக்கை விடுவாரா என நெட்டிசன்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. உடனே அவர் தன்னுடைய பாணியில் அவர்களின் சண்டை எனக்கு சுவாரசியமாகத் தான் இருந்துச்சு என ஒரே போடாக போட்டார்.

அதேபோல் திருமண விழாவில் இருவரும் எதிரும் புதிரும் ஆக அமர்ந்திருந்ததை பார்ப்பதும் ஜாலியாக இருந்தது. நம்ம வெறும் பார்வையாளர்கள் தான் என அவர் அதிரடியாக கூறியதை கேட்டு செய்தியாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அந்த வீடியோ தற்போது வைரலாகும் நிலையில் ரசிகர்கள் ரொம்ப குசும்பு தான் சார் உங்களுக்கு என கூறி வருகின்றனர். மேலும் நானும் ரவுடிதான் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News