ஒரே பட வெற்றியால் வந்த 20 பட வாய்ப்பு.. ஜீன்ஸ் படத்தை விட்டதால் நடுத்தெருவுக்கு வந்த அவலம்

திரை உலகில் எந்த அளவிற்கு திறமை இருக்கிறதோ அதே அளவிற்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே இதில் நீடித்து நிலைத்து நிற்க முடியும். அதிலும் ஒரே பட வெற்றியால் தொடர்ந்து 20 பட வாய்ப்பை தன் வசப்படுத்திய, லக்கி ஹீரோவை பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மாடலிங் துறையின் மூலம் கல்கத்தாவில் இருந்து தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்ற படத்தில் அறிமுகமானார், 90ஸ் கிட்ஸ்களின் சாக்லேட் கதாநாயகன் அப்பாஸ். இவர் ஒரு படத்தில் நடித்த அனுபவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, 20 படத்திற்கும் அட்வான்ஸ் வாங்கி வைத்துள்ளார்.

Also Read: அப்பாஸ் தவறவிட்ட சூப்பர் ஹிட் படம்.. மேனேஜரின் சூழ்ச்சியால் விஜய்க்கு அடித்த லக்

அவரது மேனேஜரும் இவரிடம் எதுவும் கூற மாட்டார். இந்த நேரத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இரண்டு படங்கள் அப்பாஸின் கைக்கு வந்தும் அதை நழுவ விட்டார். பிரசாந்த் நடிப்பில் ஹிட்டடித்த படமான ஜீன்ஸ் மற்றும் விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட காதலுக்கு மரியாதை போன்ற இரண்டு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு அப்பாஸுக்கு தேடி வந்துள்ளது.

ஆனால் அப்பாஸின் மேனேஜர் அவருக்குத் தெரியாமலே இந்த இரண்டு பட வாய்ப்பையும் நிராகரித்து விட்டார். அந்த சமயத்தில் அப்பாஸிடம் ஏற்கனவே 18 படங்கள் கையில் இருந்ததாம். ஆகையால் நேரமில்லை என்று அப்பாஸை கேட்காமல் திருப்பி அனுப்பி உள்ளார்.

Also Read: நடிச்சா ஹீரோ தான் என வீணாப்போன 6 ஹீரோக்கள்.. பொழைக்கத் தெரியாத புள்ளைங்க!

அந்த 18 படத்தில் முதல் இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததால் மீதி உள்ள அனைத்து படங்களும் அட்வான்ஸ் திருப்பி கேட்டு வாங்கி ஓடி விட்டனர். ஜீன்ஸ் மற்றும் காதலுக்கு மரியாதை போன்ற படங்களின் வாய்ப்பு தானாக தேடி வந்தது அப்பாஸுக்கு தெரியாது. பின்னர் தெரிந்து கோபப்பட்டு வருத்தமடைந்துள்ளார்.

மேனேஜர் செய்த துரோகத்தால், அதற்கு அப்புறம் அப்பாஸின் சினிமா வாழ்க்கை வேற மாதிரியாக மாறியது. அந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நடித்திருந்தால் அப்பாஸ் நிலைமை இன்று வேறு மாதிரி ஆகியிருக்கும். ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் விளம்பரங்களிலும் நடிக்க வேண்டிய அவலநிலை அப்பாஸுக்கு ஏற்பட்டது. அதிலும் கழிவறை சுத்தம் செய்யக்கூடிய விளம்பரத்தில் எல்லாம் நடித்ததுதான் கொடுமையின் உச்சம்.

Also Read: மாதவனுக்கு ஆப்பு வைத்த அப்பாஸ்.. கர்மா செய்த தரமான சம்பவம்

- Advertisement -spot_img

Trending News