வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய் டிவி சீரியலை விட்டு விலகிய நடிகைக்கு ஏற்பட்ட விபத்து.. பிசினஸில் கொடி கட்டி பறந்து வரும் மருமகள்

Vijay tv Serial Actress Got injury: கதாநாயகிகளை பொறுத்த வரை சின்னத்திரை சீரியலில் நடித்து விட்டால் அவர்கள் மக்களிடம் பிரபலமாகி விடுவார்கள். அதிலும் விஜய் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் சொல்லவே தேவையில்லை, மக்கள் மத்தியில் அவர்களுக்கு என்று மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துவிடும். அதன் மூலம் தொடர்ந்து வாய்ப்புகளை தக்க வைத்து அடுத்தடுத்து சீரியலில் நடித்து விடுவார்கள்.

அப்படித்தான் விஜய் டிவி சீரியலில் தொடர்ந்து நடித்து மிகவும் பிரபலமானார் சாய் காயத்ரி, ஈரமான ரோஜா சீரியலில் அகிலா என்ற கேரக்டரில் நடித்து அழகருக்கு ஜோடியாக டாம் அண்ட் ஜெரியாக சண்டை போட்டு இவர்களுக்கு என்று ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். இந்த நாடகம் வெற்றி பெறுவதற்கு இவங்களோட ஜோடியும் ஒரு காரணம் என்பதற்கு ஏற்ப சாய் காயத்ரி நடிப்பை பிரமாதமாக கொடுத்தார்.

இந்த நாடகம் முடிந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு கண்ணனுக்கு ஜோடியாக மருமகளாக நுழைந்தார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தாலும் போகப்போக இவருடைய நடிப்பு ஈடு செய்து விட்டது. ஆனால் அதன் பிறகு இவருடைய கேரக்டர் நெகட்டிவ் ஆக மாறிய பொழுது எனக்கு நெகடிவ் கேரக்டர் வேண்டாம் என்று அந்த நாடகத்தை விட்டு வெளியேறி விட்டார்.

sai gayatri
sai gayatri

இதனை தொடர்ந்து நீ நான் காதல் என்ற சீரியல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதிலேயும் அணு கேரக்டரில் சாய் பல்லவி நடித்து இவருக்கான ஒரு முத்திரையை பதித்தார். ஆனால் திடீரென்று அவசர அவசரமாக இவருடைய கேரக்டரில் இருந்து வெளியேறி நான் கொஞ்ச நாளைக்கு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

அதற்கு என்ன காரணம் என்றால் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடைய பிசினஸில் அதிக ஈடுபாடு கொண்டு அதை பெரிய அளவில் உருவாக்க வேண்டும் என்று போராடினார். அதாவது இவருடைய கூந்தலுக்கு என்று மிகப்பெரிய அழகு இருக்கிறது. இதனுடைய ரகசியம் என்னவென்று ஆரம்பத்தில் நிறைய பேரு இவரிடம் கேட்டிருக்கிறார்கள்.

அப்பொழுது ஒவ்வொன்றாக சொல்லிய நிலையில் அதற்கான விஷயங்களை ஏன் நாமளே செய்து கொடுக்கக் கூடாது என்ற முயற்சியில் முதல் படிக்கட்டை எடுத்து வைத்தார். அப்படித்தான் சாய் சீக்ரெட் என்று ஹேர் ஆயில் பிசினஸை தொடங்கினார். அதன் பிறகு அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தை தயாரித்து, குறைந்தது 25க்கும் மேற்பட்ட வேலை ஆட்களுக்கு வேலை கொடுத்து எட்டு பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வெற்றிகரமாக பிசினஸில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது சோசியல் மீடியாவில் இவர் பிசினஸ் விஷயங்களை ஷேர் பண்ணி வேலை ஆட்களிடம் இவர் பழகும் விதங்களையும், பண்டிகை நாட்களுக்கு வேலையாட்களை வெளியே கூட்டிட்டு போய் அவர்களை மகிழ்ச்சியாக வைப்பதிலும் நிறைய விஷயங்களை செய்து அனைவரது கவனத்தையும் பெற்றார். அப்படிப்பட்ட இவருக்கு தற்போது ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

அதாவது வேலை செய்யும்போது மிஷினில் கை சிக்கி கையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பொழுது மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டு இன்னும் ரெண்டு வாரத்தில் எனக்கு சரியாகிவிடும் என்று போஸ்ட் போட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த இவருடைய ரசிகர்கள் சீக்கிரம் குணமடைந்து உங்களுடைய இலட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News