புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிரியங்கா மோகனுக்கு மேடையில் ஏற்பட்ட அசம்பாவிதம்.. நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்

Priyanka Mohan: நடிகை பிரியங்கா மோகன் கன்னடம், தெலுங்கு படங்களில் அறிமுகமாய் இருந்தாலும் தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து டான், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து இவருக்கு என்று தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கோல்டன் ஸ்பேரோ என்ற பாடலில் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தும் விதமாக தற்போது ஓஜி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு அசம்பாவிதம் என்று மாலை பிரியங்கா மோகனுக்கு ஏற்பட்டு விட்டது.

அதாவது தெலுங்கானா மாநிலம் டோரூரில் இன்று நடைபெற்ற கசம் ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்கு சென்ற பிரியங்கா மோகன் பொது மேடையில் நின்று ரசிகர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அப்பொழுது மேடை இடிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கூட்ட நெரிசலில் மேடையில் இருந்த காங்கிரஸ் தலைவர் உட்பட மூன்று பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

priyanka mohan (1)
priyanka mohan (1)

அதில் பிரியங்கா மோகன் இருந்ததால் அவருடைய பாதுகாவலர் உடனடியாக இவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரியங்கா மோகனுக்கு என்ன ஆகிவிட்டது? ஏதாவது ஆபத்து இருக்கிறதா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வரும் நிலையில் தற்போது இவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பிரியங்கா மோகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் டோரூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் நடந்த விபத்தில் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நான் நலமாக இருக்கிறேன். சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக நான் உயிர் தப்பி இருக்கிறேன் என்பதை எனது நலம் விரும்புகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அத்துடன் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.

என்னுடைய ரசிகர்களுக்கும் மிக்க நன்றி உங்கள் அன்பு எனக்கு எப்போதும் வேண்டும். எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை கொஞ்சம் ஓய்வு மட்டும் தேவை என்று அனைவருக்கும் நன்றி உடன் எக்ஸ தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

Trending News