Connect with us

Cinemapettai

மதராசபட்டினம் படத்தில் முதலில் எமி ஜாக்சன் இல்லையாம்! ஹாலிவுட் டாப் நடிகைக்கு வலைவீசிய விஜய்

cinema-amy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மதராசபட்டினம் படத்தில் முதலில் எமி ஜாக்சன் இல்லையாம்! ஹாலிவுட் டாப் நடிகைக்கு வலைவீசிய விஜய்

2010 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மதராசபட்டினம். இந்த படம் ஆர்யாவுக்கு சினிமாவில் ஒரு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதேபோல் முதல் முதலாக தமிழ் சினிமாவில் எமி ஜாக்சன் என்ற அழகிய கவர்ச்சி புயல் களமிறங்கியது இந்தப் படத்தில்தான். சுதந்திரத்திற்கு முன்பு உள்ள காலகட்டம் என்ற கதையில் உருவான இந்த படத்தில் எமி ஜாக்சன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த படத்தில் முதன்முதலாக எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்யப்படவில்லை. உலகம் முழுவதும் புகழ் பெற்ற பேட் பாய்ஸ் பார் லைஃப் என்ற படத்தின் நாயகி வனிஷா ஹுட்ஜென்ஸ்(vanessa hudgens) என்பவரை தான் முதலில் படத்தில் சேர்ப்பதாக இருந்தாராம் விஜய்.

vanessa hudgens-cinemapettai

vanessa hudgens-cinemapettai

ஆனால் அவருடைய காண்டாக்ட் கிடைக்காமல் போய் விட்டதாம். அதனால் விஜய் மாடல் அழகியான எமி ஜாக்சனை பார்த்து இவரே சரியாக இருப்பார் என தேர்வு செய்தாராம்.

எமி ஜாக்சனுக்கு ஆகவே அந்த படம் ஓடியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக மாறிய ஏமி ஜாக்சன் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளார். அதே நேரத்தில் மதராசப்பட்டினம் படத்தின் ரிலீஸ் நாளையும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top