ஏமி ஜாக்சன் சில மாதங்களாக இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பணியாதோ அவர்களை டேட்டிங் செய்து வந்தார். பின்னர் 2019 ஜனவரியில் தான் அதைப்பற்றி ஸ்டேட்டஸ் தட்டினார். அடுத்து மார்ச் மாதம் தான் கர்ப்பம் என்றார், மே மாதம் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல்கள் வந்தது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் கூட யோகா செய்வது, தியானம், போட்டோஷூட் என அசத்தி வந்தார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஏமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என பெயரும் வைத்தனர் இந்த ஜோடி.
தன் மகனுடன் இருப்பது போன்ற போட்டோக்களை பகிர்ந்தார் ஆரம்பத்தில். இந்நிலையில் தன் மகனுக்கு என போட்டோஷூட் நடந்தி இருக்கிறார். அதில் ஒரு போட்டோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

