Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜி வி பிரகாஷ் – ஏ எல் விஜய் இணையும் சஸ்பென்ஸ் திரில்லர் “வாட்ச் மேன்” பட டீஸர்.
Published on
நம் கோலிவுட்டில் மோஸ்ட் பிஸி ஹீரோக்கள் யார் என்றால் அது விஜய் சேதுபதி மற்றும் ஜி வி பிரகாஷ் தான். எப்படி கால் ஷீட் ஒதுக்குகிறார்கள், இப்படி இத்தனை படங்களில் நடிக்கிறார்கள் என்பது புரியாத புதிரே.
வாட்ச் மேன்
இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி வி இணையும் படம். ஏற்கனவே தலைவா படத்தில் டான்ஸ் மட்டும் ஆடியுள்ளார் நம் ஹீரோ. இப்படத்திற்கு நீரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். எடிட்டிங் விஜயன். படத்தில் நீரவ் ஷா, சுமன் , ராஜ் அருண் நடித்துள்ளார். ஜி வியே இசை அமைத்துள்ளார். பாடல்களை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.
படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று மாலை அறிவித்தது போல 5 மணிக்கு டீசரை வெளியிட்டார்.
