அந்த அழகு தேவதையின் மகனா இவர்..? ரஜினி பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்.!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான “மதராசபட்டினம்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவர் 2009ல் அமெரிக்காவில் மிஸ் டீன் வேர்ல்டு பட்டம் வென்றார்.

பின் இவரை தமிழ் சினிமாவிற்கு அழைத்துவந்தார் ஏ.எல்.விஜய். மதராசப்பட்டினம் வெற்றிக்குப்பின் தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி என பல தமிழ் படங்களில் நடித்தார். இதன்பின் ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.

கடைசியாக ரஜினியுடன் 2.ஓ படத்தில் ரோபோவாக நடித்திருந்தார். ஏமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் பனயிட்டோ இருவரும் காதலித்து, 2019-ஆம் ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர். தொடர்ந்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானர் ஏமி.

அதே ஆண்டில் தங்கள் முதல் குழந்தை ஆண்ட்ரியாஸை வரவேற்றனர் ஏமி-ஜார்ஜ் தம்பதியினர். திருமணத்திற்குப் பின்னும் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வந்தார்.

இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தது. அதிலும் தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டுமே அவ்வப்போது நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் தனது மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

amy-jackson
amy-jackson

குழந்தை பிறந்தபின்பும் கூட தொடர்ந்து இவர் தனது பிகினி போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருகிறார்.

amy-jackson
amy-jackson