amy-jackson-enthiran-2ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி இல்லாத சில காட்சிகள் படமாகி வருகிறது.

முன்னதாக இப்படத்தில் நடிகை எமி ஜாக்சன் ரோபோவாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் இதுகுறித்து பேசிய நடிகை எமி ஜாக்சன் இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனினும் 2.o படத்தில் தனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.