Tamil Cinema News | சினிமா செய்திகள்
எமி ஜாக்சன் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ.. இதோடு முடிந்தது
Published on
எமி ஜாக்சன் திருமணம்
மதராசபட்டினம், தெறி, தாண்டவம், ஐ, 2.o போன்ற பல திரைப்படங்களில் நடித்த மாடலும் நடிகையுமான லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் தனது நீண்ட கால நண்பரும் தொழிலதிபருமான ஜார்ஜ் என்பவர் சிறிது நாட்களுக்கு முன்பு நிச்சயம் செய்து கொண்டார்.
அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கையில் ஒரு வைர மோதிரம் மின்ன தன் காதலன் ஜார்ஜுடன் கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதனால் சமீபத்தில் கல்யாணமான நடிகைகளின் பட்டியலில் எமி ஜாக்சன் விரைவில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் தற்போது எந்த பெரிய படமும் அமையவில்லை எனவே இவர் தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்து விட்டார்.

amy-jackson
