Ajith-AmyJackson-KritiSanon‘வேதாளம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் பெரும்பாலான ‘வேதாளம்’ குழுவினர்கள் இணையக்கூடும் எனத் தெரிகிறது.

தற்போது இப்படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சண்டைப் பயிற்சிக்கு ஸ்டண்ட் சில்வா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இதில் நயன்தாராவின் பெயர் முன்னிலையில் உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் எமி ஜாக்சன் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோரின் பெயர்களும் உள்ளதாக தெரிகிறது. எமி ஜாக்சன், தற்போது ரஜினியின் ‘கபாலி’, விஜய்யின் ‘தெறி’ படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சனோன், மகேஷ்பாபு உடன் ‘1’ மற்றும் ஷாரூக்கான், கஜோலுடன் உடன் ‘தில்வாலே’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நாயகி தேர்வு முடிந்தபின் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும்.