லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஏமி ஜாக்சன் , மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ, தங்கமகன்,  கெத்து, தெறி, எந்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பது எல்லாமே பிரமாண்ட படங்கள். ரஜினி, விஜய் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதால் எமியுடன் ஜோடி சேர வேண்டும் என்று ஆசைப்பட்ட இரண்டாம் தட்டு ஹீரோக்கள் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்துக்கு சென்று விட்டார் அவர். இயக்குனர் ஷங்கரின் 2.O மட்டுமே அவர் நடித்து வரும் படம்.

Amy Jackson to reprise the role of SATURN GIRL in Super Girl series.
ஏமி ஜாக்சன்

நடிகை ஏமி ஜாக்சன் தற்போது “Supergirl” சீரிஸில் ‘Saturn Girl’ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். அவர் நேற்று தன் ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டார் …

மேலும் “வந்த 5 நிமிடத்தில் முடிவெடுத்துவிட்டேன்,2018ல் இது தான் என் புது வீடு என்று.”

இந்த டீவீட்டால் அவர் இந்திய படங்களில் இனி நடிக்கும் வாய்ப்பு குறைவு என அவர் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

ஹிந்தி படமான குயீன் ரீ மேக்கில் நடிக்க இருந்த ஏமி சமீபத்தில் தான் இப்படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த வருடத்தில் இவர் இனிமேல் இந்த 2018ல் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைவு தான் என்பது உறுதியாகிவிட்டது .