Tamil Cinema News | சினிமா செய்திகள்
எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் நெட்டிசன்கள்…

தோழியுடன் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் நெட்டிசன்கள் படு குழப்பதில் இருக்கிறார்கள்.
உலக பதின்வயது அழகி போட்டியில் கலந்து கொண்ட எமியின் புகைப்படத்தை பார்த்த கோலிவுட் தயாரிப்பாளர்கள் அவரை மதராசபட்டினம் படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தனர். எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் படத்தின் நாயகியாக நடித்தார். படம் ரிலீஸாகியதும், அறிமுக நடிகையான எமியை பல ஊடகங்களும் புகழ்ந்து தள்ளின. பெரும் பாராட்டுக்களால் தமிழ் சினிமாவில் நடிகையாக தடம் பதித்தார். தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் நடித்து இருக்கிறார். எமியின் திரை வாழ்வில் முக்கிய மைல் கல்லாக அமைந்து இருப்பது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 2.ஓ. இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷயுடன் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.
தற்போது, எமி ஜாக்சன் ஹாலிவுட் சீரிஸில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் எமி, அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை அதிரவிடுவதிலேயே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு கலவரத்தை கிளப்பி இருக்கிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பெண்ணுடன், நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதிலும், அப்புகைப்படத்துக்கு மனைவி வாழ்க்கை என அவர் குறிப்பிட்டு இருப்பது தான் தற்போதைய சமூக வலைத்தளத்தில் வைரல் டாக்காக மாறி இருக்கிறது. ஆனால், எமியுடன் இருக்கும் பெண் யார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து, எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை இது ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரின் இன்ஸ்டாவிலேயே, நீங்கள் என்ன லெஸ்பியனா என பலரும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அட ஏம்மா! எப்ப பாரு இதே சோழியா போச்சு உனக்கு!
