விளம்பரப் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகை எமி ஜாக்சன் காயமடைந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ’2.ஓ’. இதில் ஹீரோயினாக நடிக்கிறார் எமி ஜாக்சன். இதில் அவர் நடித்தக் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து லண்டன் சென்ற எமி ஜாக்சன், அங்கு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வேலையில் இருந்தார். இதற்கிடையே விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

’விளம்பரப் படம் ஒன்றுக்காக, எமி ஜாக்சன் வேகமாக ஓடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாரத விதமாக அவர் கால் சுளுக்கு ஏற்பட்டு வீங்கியது. எமி ஜாக்சன் வலியால் துடித்தார். இதையடுத்து மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்’ என்று எமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.