ரஜினி நடிக்கும் 2.0 படம், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது.. கடந்த மாதமே படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது.

rajini 2.0

படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவருவதால் அதற்கான பணிகளும், கிராபிக்ஸ் பணிகளும் நடந்து வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட இயக்குனர் ஷங்கரும், ரஜினியும் விரும்பினார்கள்.

ஆனால் பணிகள் முழுமை அடையாததால் தீபாவளிக்கு படம் வெளிவரவில்லை.

படம் 2018 ஜனவரி 26ந் தேதி குடியரசு தினத்தன்று வெளிவரும் என்று லைகா நிறுவனம் அறிவித்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இதன் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

2.0

இந்த நிலையில் படம் குடியரசு தினத்துக்கு வெளிவரவில்லை என்றும், ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் தான் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

amy jackson

ஷங்கரின் ஐ, 2.0 என தொடர்ந்து பல வருடங்களாக சென்னையிலேயே இருந்த நடிகை எமி ஜாக்சன் தற்போது Supergirl சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.

அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “2018ல் இது தான் என் வீடு என வந்த 5 நிமிடத்தில் முடிவெடுத்துவிட்டேன்” என கூறியுள்ளார். அதனால் அவர் இந்திய படங்களில் இனி நடிக்கும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

amy jackson

தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகும் குயீன் படத்தில் கமிட் ஆகியிருந்த எமி சமீபத்தில் தான் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இவர் இனி தமிழ்ப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.