Tamil Cinema News | சினிமா செய்திகள்
வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்போட் வீடியோ வெளியிட்ட அமிர்தா ஐயர்.. ட்ரெண்டாக்கும் அஜித் ரசிகர்கள்
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தினை அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஏனென்றால் இவர்களது கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து. இந்த திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெரும் என அஜித் ரசிகர்கள் முழுவதுமாக நம்பியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தை பற்றி அப்டேட்களை சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது அஜித் ரசிகர் கேட்டு வந்தனர். ஆனால் படக்குழுவினர் இப்படத்தினை பற்றி அப்டேட்களை சஸ்பென்சாக வைத்து வருகின்றனர்.
ஆனாலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோக்களை எடுத்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அமிர்தா ஐயர் வலிமை படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் பாடல் ஒன்றை வீடியோ எடுத்துள்ளார். தற்போது இவர் எடுத்த வீடியோ அஜித் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமிர்தா ஐயர் எடுத்த வீடியோவை பார்ப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தால் போதும்.
வீடியோ பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

ajith-valimai
