செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

இதுதான் உங்க நிர்வாகமா? பள்ளிகளில் 8 மாணவிகள் திடீர் மயக்கம்.. பதறிய பெற்றோர்கள்

சென்னை திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த மாதம் 25ஆம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு, 35 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இது வரை இந்த வாயு கசிவுக்கான காரணம் கண்டறியபடவில்லை.

மேலும் இது என்ன வாயு என்று ஆய்வு செய்தபோது, அமோனிய வாயு என்று கூறப்படுகிறது. கடந்த 25 ஆம் தேதி, இந்த சம்பவம் நடந்தபோது, தேசிய பேரிடர் மீட்புப் படை உடனடியாக பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதோடு, காவல்துறையினரும் பள்ளிக்கு விரைந்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

மீண்டும் மீண்டுமா?

நடத்தப்பட்ட ஆய்வில், பள்ளியின் வேதியியல் ஆய்வகத்திலிருந்து அமோனியா வாயு கசிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறுபக்கம், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பலர் பள்ளி நிர்வாகம் மெத்தமானதாகச் செயல்பட்டதாகக் கூறி பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதை பெரிய போராட்டமாக வெடிக்க விடக்கூடாது என்று முடிவு செய்த அரசு, பெற்றோர்களை அப்போதைக்கு off செய்து, நடவடிக்கை எடுக்கபடும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் 10 நாள் கழித்து மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.

இன்றும் பள்ளியில் வாயு கசிவு காரணமாக 8 மாணவிகள் மயக்கமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் , சென்னை மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து, தற்காலிகமாக அந்த பள்ளியை மூட முடிவு செய்துள்ளனர். வாயு கசிவுக்கான காரணம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே பள்ளி மீண்டும் திறக்கப்படும் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, அந்த பள்ளி மாணவர்களை வேறு எந்த பள்ளியில் சேர்ப்பார்கள் என்பது தொடர்பான குழப்பங்கள் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பல்வேறு சமூக ஆர்வலர்கள், சிறந்த நிர்வாகம், சிறந்த கல்வி, தரமான அரசு பள்ளி, என்றெல்லாம் கூறுகிறீர்களே.. இந்த லட்சணத்தில் தான் உள்ளது உங்கள் தரமும் நிர்வாகமும் என்று விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News