Connect with us

Cinemapettai

50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25

Cinema News | சினிமா செய்திகள்

50 கோடி செலவில் ‘அம்மா தியேட்டர்கள்’ – டிக்கெட் விலை ரூ.25

amma-theaterசென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று ரிப்பன் கட்டிடத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியின் இந்த பட்ஜெட் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த பட்ஜெட்டின் ஒரு தீர்மானத்தில் சென்னையில் ‘அம்மா தியேட்டர்கள்’ அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு திரையரங்கும் குளிர்சாதன வசதியுடன் நவீன டெக்னாலஜியுடன் கூடிய சவுண்ட் சிஸ்டத்துடனும் அமைக்கப்படும் என்றும், இந்த திரையரங்குகளில் புதிய படங்கள் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சென்னையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரூ.120 டிக்கெட் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் ‘அம்மா திரையரங்கில்’ ரூ.25 மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top