தெறி’ படத்தில் நடித்த நயனிக்ககாவுக்கு, சூட்டிங் ஸ்பாட்டிலேயே பயிற்சி கொடுத்து வருகிறார் அவரது அம்மா நடிகை மீனா.

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடித்த படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. இந்த படத்தில் அவர்களின் மகளாக பேபி நைனிகா நடித்திருந்தார். இவர் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்திலும் மகளாக நடித்தவர். இப்படம் தற்போது தமிழில் அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் ரீமேக்காகிக்கொண்டிருக்கிறது. படத்தை சித்திக் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நைனிகா நடித்த வேடத்தில் மீனாவின் மகளான தெறி பேபி நைனிகா நடிக்கிறார்.

மேலும், தெறி படத்தில் விஜய்யுடன் என்ட்ரி கொடுத்த பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தவர் நைனிகா. இந்த படத்தில் இன்னும் பெரிய அளவில் நடிப்பில் ஸ்கோர் பண்ண வைத்து விட வேண்டும் என்பதற்காக சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். முக்கியமாக இந்த படத்தின் மலையாள பதிப்பில் நடித்த நைனிகாவின் சாயல் இந்தப் படத்தில் வராத வகையில் பார்த்துக் கொண்டாராம் மீனா.