அம்மாவின் ஆன்மா முதல்வர் பழனிசாமி மேல் புகுந்ததால் அவரைப்போல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.. ஆர்.பி.உதயகுமார் பேச்சு!

அம்மாவின் ஆன்மா முதல்வர் பழனிசாமி மேல் புகுந்ததால் அவரைப்போல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசி உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், “நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

திமுகவின் தற்போதைய விளம்பர பலகையில் கருணாநிதியின் படமே இருப்பதில்லை என்றும் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி படமும் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

அம்மா மற்றும் மகன் என மன்னராட்சிக்கு இடம் அளிப்பது போல் உள்ளது” என்றார்.

Leave a Comment