Connect with us

Cinemapettai

அம்மா இருசக்கர வாகன திட்டம்.. பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்

amma-two-wheeler

Politics | அரசியல்

அம்மா இருசக்கர வாகன திட்டம்.. பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்

அம்மா இருசக்கர வாகன திட்டம் ஜூன் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அதேபோல் விண்ணப்பிக்கும் கடைசித்தேதி அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.

அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதாவது வேலையில் பணிபுரியும் பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட பெண்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த அம்மா இருசக்கர வாகன திட்டம் ஜூலை மாதம் 4ம் தேதிக்குள் முடிவடைய உள்ளது. அதற்குள் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் மகளிருக்கு 50 சதவீத மானியம் (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மட்டும்) மற்றும் கடன் தொகையில் இரு சக்கர வாகனம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தினை பெற சில தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என கூறியுள்ளார். அதாவது மகளிர் பயனாளியாக இருக்க வேண்டும். அதுவும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வராகவும் தமிழகத்தில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் அவருடைய ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் இருக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவரது வயது 18 முதல் 40 வரை உள்ளவராகவும் மற்றும் ஓட்டுநர் உரிமம் அதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top